பங்குனி உத்தர விழா நிகழ்வுகள் நடந்த திருத்தலங்களையும் இறையையும் நேரில் வணங்கி வழிபட்டது போல் கண்முன்னால்
காட்டியது இன்றைய செய்தித் தாள்.
கிரிண்டர் என்று அடுத்த செயலியா? தினந்தினம் செத்துப் பிழைத்த கதையாகி விட்டது.
AI ஆசிரியை வந்தாச்சா! ஏற்கனவே ஏராளமான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகக் கிடக்கிறது என்று செய்திகள் வந்த வண்ணமிருக்கிறது. இனிமேல்
ஒரு பள்ளிக்குத் தேவையான பத்துப் பதினைந்து ஏஐ ஆசிரியர்களையும் ஒரு வன்பொருள் (ஹார்டுவேர்) பொறியாளரையும் நியமித்து விடலாம். மனித வளம் ?
நீலகண்ட பிரம்மச்சாரி போன்றவர்கள் வாழ்ந்த தேசம். பெருமையாக இருக்கிறது.
2 குறுங்கதைகளும் நல்ல பொருளை உள்ளடக்கி இருக்கிறது.
நடந்தால் நல்லது. நடக்க வேண்டுமே.
கர்நாடகா முதல்வர் மீது தொடர்ந்து ஊழல் புகார் வந்த வண்ணமாய் இருக்கிறதே.
டொமினிக்கனில் இரவு விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 221 பேர் உயிழப்பாம். தினந்தினம் ஏதாவதொரு விபத்தும் உயிழப்பும் ஏற்படுகிறதே.
கடந்த ஆண்டு மழை வெள்ளச் சேதம். இவ்வாண்டு வறட்சி ஏற்படும் என வாங்கா பாபா கணிப்பு என்ற தகவல் மேலும் பீதியை உருவாக்குகிறதே.
கஞ்சா கடத்தல் தங்கம் கடத்தல் போன்று இப்போது பெண்களைக் கடத்தி வணிகம் செய்ய ஆரம்பித்து விட்டார்களா?
தங்கம் விலை எகுறுகிறது.
மின்சாரத்தில் ஓடும் கார்கள் சந்தைக்கு வரும்போது மின்சார சார்ஜிங் மையங்கள் தேவைப்படுமே. இப்போது தமிழக மின்வாரியம் அதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபடுவது நல்ல செய்தி
-சிவ. சே. முத்துவிநாயகம்
திருநெல்வேலி