tamilnadu epaper

வாசகர் கடிதம் (சிவ. சே. முத்துவிநாயகம்)-21.04.25

வாசகர் கடிதம் (சிவ. சே. முத்துவிநாயகம்)-21.04.25


       சிறுநீரகக் கல் பிரச்னைக்கு சிறுபீளை மருத்துவம் உண்மை. ஒருநண்பர் அவரது அனுபவத்தில் கண்டு இதனை பல வருடங்களுக்கு முன்பே சொல்லியிருக்கிறார்.

காட்டில் சாதாரணமாக வளர்ந்து கிடக்கும். அதன் சக்தி அறியாமல் நாம் இருக்கிறோம்.

    அரசு அலுவலகங்களே

மின் கட்டணம் செலுத்தாமல் இருந்தால்

மின்வாரியம் எப்படி இயங்கும்.

       கஞ்சா ஹோம் - கண்டு பிடித்திருக்கிறார்

கள்.எவ்வளவு மனோபலம். தவறு என்பதைக் கொஞ்சம் கூட உணரவில்லையே.

அரசு இயந்திரம் எத்தனை பேரைத்தான் கண்டறிய முடியும்.

ஒரு நபருக்கு ஒரு காவலரையா நியமிக்க முடியும். செலவு என்னவாகும்.

        இறைவழிபாட்டில்

இகம் தாங்கும் பரம்பொருளின் உருவத்தை தலைகள் பலவாகக் காட்டினாலும் கால்கள் இரண்டே தான்.

பாதம் கண்டே மேல்நோக்கி பார்வை படர வேண்டும். திருமுகம் காண வேண்டும்.

      வள்ளுவமும் கூட

‘’நற்றாள் தொழாஅர் எனின்’’ எனத் தெரிவித்திருப்பது உண்மை தான். திரு சரவணனின் கட்டுரை அருமை.

       அரிசிச் சோறு நீரழிவக்கு ஆகாது .சர்க்கரைச் சத்தை அதிகப் படுத்தும் என்றார்கள். தற்போது புற்றுநோயை உருவாக்கும் என்ற செய்தி வந்துள்ளது. நம் உணவில் அடிப்படையே அரிசி தான். கோதுமையில் குளூட்டான் என்கிறார்கள். பின் எதைத் தான் உண்பது?

    சென்னையில் 100 மின்சார பேருந்துகள் விரைவில் இயங்க இருக்கிறதாம். நல்லது. டெல்லியைப் போல் காற்று மாசுபடுவதற்கு முன் சென்னை சீர்பட ட்டும்.

       பெண் என்றாலே மென்மை என்போம்.

17 வயது பையனை கத்தியால் குத்தி பெண்ணொருத்தி பெண்தாதா என்ற பெயர் பெற்றிருக்கிறார். காலம் செய்யும் கோலமா?

      உடன்பிறந்த அண்ணனும் அவன் மனைவியும் சேர்ந்து சகோதரனுக்கு ஒரு பெண்ணைக் காட்டிவிட்டு பின் பெண்ணின் விதவைத் தாயை மணமுடித்து வைக்க முயன்றிருக்கிறார்கள் .

யாரைத் தான் நம்புவதோ 

பூமியிலே!

        பூலித் தேவன் வரலாறு போற்றத் தகுந்தது.

       அரசுப் பணியில் இருந்தபோது 50 ஆண்டுகளுக்கு முன் எழுத்துப் பணிக்கு அனுமதி கேட்டேன் கிடைக்கவில்லை. அப்படியே விட்டுவிட்டேன் .அரசு அனுமதி தேவையில்லை என அரசு அறிவித்து இருப்பது கண்டு மகிழ்ச்சியாக இருக்கிறது.


-சிவ. சே. முத்துவிநாயகம்

திருநெல்வேலி