இன்று (13.04.2025) தமிழ்நாடு இ பேப்பர் நாளிதழில் முதல் பக்கத்தில் குடியரசு தலைவருக்கும் காலக்கெடு விதித்த உச்சநீதிமன்றம் உத்தரவு வரவேற்க தக்கது.
NMMS தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
நலம் தரும் மருத்துவம் பகுதியில் சுண்டைக்காய் வத்தல் உண்பதால் ஏற்படும் பலன்கள் பற்றி பல அரிய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.
கோரிக்கை மனுவை கிடப்பில் போடுவது பற்றிய மதுரை உயர்நீதிமன்ற உத்தரவு வரவேற்க தக்கது.
காதலின் பொன்வீதியில் தொடர் கதை அடுத்த என்ன? என ஆவலை தூண்டுவதாக உள்ளது
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் பாஷ்யம் ஒரு ஓவியர் என்பதும் பாரதியார், காந்தி ஒவியம் வரைந்தது என பல தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.
பல்சுவை களஞ்சியம் பகுதியில் தாய்லாந்தின் சோங்க்ரான் பண்டிகை பற்றிய தொகுப்பு அருமை, நேற்று (12.03.2025) தமிழ் புத்தாண்டு பஞ்சாங்க வாசித்தல்
ஜோதிடம் அறிவோம் பகுதியில் குறிப்புகள் சிறப்பு.கோவை சுற்றுலா தொகுப்பு சிறப்பு
ஒலிம்பிக் போட்டி கிரிக்கெட் இணைப்பு செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.
கடந்த (10.04.2025) பயணங்கள் முடிவதில்லை பகுதியில் எகிப்து பயணங்களில் நைல் நதி, சஹாரா பாலைவனம், பிரமிடு, மம்மிஸ் புகைப்படங்கள் ஆகியவை அருமை.
அனைவருக்கும் இனிய விசுவாவசு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
-தேனே T.P.குமரன்,
மகர்நோம்புச்சாவடி,
தஞ்சாவூர்.