பாகிஸ்தான் தாக்குதலை இந்தியா
வெற்றிகரமாக முறியடித்தது
மாணவர்களுக்கு அழுத்தம்
கொடுக்க வேண்டும் என அமைச்சர்
அறிக்கை . எட்டு தல விருட்சங்கள்
கொண்ட அதிசய கோவில் மரம்
வியக்க
வைத்தது. வாத நோய்களை
குணப்படுத்தும் பேரிக்காய்
பற்றிய கட்டுரை அருமை.
குங்குமப்பூவில் எவ்வளவு
நன்மைகள் வியக்க வைக்கிறது.
பொய்க்கு பொய்யே மருந்து
என்ற கட்டுரை அற்புதம்
ரிஷி வந்தியா சாரின் பனித்துளி
கவிதை நச்சென்று இருந்தது
பாகிஸ்தான் போரின் காரணமாக
உலக வங்கி இடம் கடன் கேட்டு
கையேந்துகிறது. போர் காரணமாக
ஏடிஎம்கள் மூடப்படும் அபாயம்
உள்ளது. இன்றைய சூழ்நிலையில்
போர் வேண்டாம் போரை தவிர்ப்பது
நல்லது இல்லை என்றால்
இரண்டு நாட்டுக்கும் பேரிழப்பு
ஏற்படும் பொருளாதாரம் மந்த
நிலைக்கு சென்று விடும்.
உலகத்தில் அமைதி நிலவ
பேரன்பு பிரார்த்தனை ஒன்றே வழி
நாட்டு நடப்புகளை புட்டு புட்டு
வைப்பது தமிழ்நாடு இ பேப்பர் க்கு
நிகர் இல்லை அனைத்து தரப்பு
மக்களையும் திருப்திப்படுத்தும்
விதமாக பத்திரிகை உள்ளது
பாராட்டுக்கள் சார்
-நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி