tamilnadu epaper

வாசகர் கடிதம் (நா. புவனாநாகராஜன்)-11.05.25

வாசகர் கடிதம் (நா. புவனாநாகராஜன்)-11.05.25


தமிழ்நாடு இ பேப்பர் எனும் அறிவு சாா்ந்த மழலை, தத்தி நடைபழகி, தனித்துவம் கண்டு இரண்டாம் ஆண்டை நிறைவு செய்யும் வகையில் 12.5.2025ல் முன்னூறாவது நாள் தொடுகிறது! முன்னூறு என்பதே பத்து மாத பந்தம் அதாவது தனக்கு நிகர் தானே என விஸ்வரூபமாய் வளர்ந்து தனி ஒரு இடம் பிடித்து வெற்றிகரமான முன்னூறாவது நாளில் தடம் பதிக்கிறது கண்டு மனம் சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கிறது, இந்த மகிழ்வுக்கு அனைத்து வகையிலும் காரணமான ஆசிாியர் குழுமத்திற்கு என் குடும்பம் சாா்பான நெஞ்சாா்ந்த நன்றி 

நான் பாா்த்த வகையில் எனக்கு நினைவு தொிந்த வகையில் 9 பக்கங்களாய் மலர்ந்து இன்று இருபது பக்கங்களாய் விாிவாக்கம் செய்யப்பட்டு பத்திாிகை உலகில் தனி ஒரு முத்திரை பதித்து வரும் தமிழ்நாடு இ பேப்பரை வாழ்த்துவதில் மட்டுமல்ல அதோடு என் குடும்பமே தொடர்ந்து பயணிப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன், 

நாளுக்கு நாள் பிரபல தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தொண்டர்களின் எண்ணிக்கையை விட வாசகர் கூட்டம் பெருகி வருவது கண்டு மனது 

பெருமகிழ்ச்சி அடைகிறது, அதே நேரம் ஆனந்தப் பூங்காற்றாய் மனது ஆா்ப்பரிக்கிறது, எத்தனை எத்தனை புதுமை புகுத்தி விடிவதற்குள் எழுப்பி வரவேற்பறையை மகிழ்விக்கும் பணியில் முதலிடம் வகித்து வருவது சந்தோஷமே, 

எப்படி சாத்தியமாகிறது 

அனைத்து தரப்புகளையும் சரிசெய்து சமன் படுத்தி செய்திகளை முந்தித் தருவதில் முத்திரையல்லவா பதித்து விட்டது,என்றே சொல்வேன்  

என்ன சொல்லி பாராட்ட ?எப்படிப் பாராட்ட? இன்னும் அறுபத்தி ஐந்து நாட்களில் முத்தான மூன்றாம் ஆண்டு 

இன்னும் என்ன என்ன சாதனை படைக்கப் போகிறாரோ ஆசிாியர்? எது நடந்தாலும் வாசகர்களுக்கு மகிழ்ச்சிதான்!

கொண் டாட்டம்தான்! பல்வேறு வகையான செய்திகளின் வண்ணக்களஞ்சியமாய், தனி முத்திரை பதித்து,

 தடம் புரளாமல் சிறப்பாக பயணம் செய்து வருவது கண்டு அளப்பறிய சந்தோஷம் அடைகிறேன் !

புதிது புதிதாய் கட்டுரைகள்,

 தகவல்கள், உள்ளூா் அயலூா்,செய்திகள் நாட்டு நடப்புகள், என அத்தனையையும் ஒருங்கே தொகுத்து பன்முகமாய், பந்தா இல்லாமல் பக்குவமாய் செய்திகளை தருவதில் இ பேப்பருக்கு இணை இ பேப்பர் மட்டுமே! என்றே பாராட்டுவேன்! இது மிகையான கடிதமல்ல ,உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வரும் வாா்த்தைகளின் வர்ண ஜாலம் ,

மேலும் மேலும்புதுமை படைப்பீா்கள் என்ற நம்பிக்கை துளிா் விடுகிறது, தலையங்கத்தில் தனித்துவம் சிந்திக்க ஒரு நொடியில் சிந்தையைத்தூண்டும் தகவல்கள், நல்ல தகவலைத்தரும் பஞ்சாங்கம், 

வரலாற்றுச்செய்திகள் மனதைக்கொள்ளை கொள்ளும் 32 வாசகர்களின் கவிதைகள் ,சிறப்பாய் வலம் வரும் வாசகர் கடிதங்கள், ஜாதகம், பல்சுவை களஞ்சியமாய் பல புதிய தகவல்கள், ஆன்மிகச்செய்திகள், கோவில் விழா, பள்ளிகள் விழா ,போன்றதகவல் கள் என அறுசுவை உணவை படைப்பதே இ பேப்பரின், அருமை, பெருமை, என்பேன் 

உள்ளங்கையில் உலகம் என்பது போல அனைத்து தகவல்களையும் அதன் பதம் மாறாமல் விருந்து படைத்து வரும் மூன்றாமாண்டு துவங்கும் முன்னூறாவது நாளில் மனதார உளமாற வாழ்த்துகிறேன் எங்கள் உள்ளம் கவர்ந்த இ பேப்பர் மேலும் மேலும் சாதனைகள் பல புாிந்து உச்சம் தொட வேண்டும் என தமிழ்கடவுள்,இந்து தெய்வங்கள் , நாகூா் ஆண்டவர்,மற்றும் வேளாங்கன்னி மாதா இவர்களை மனதார வேண்டுகிறேன், இந்த நேரத்தில் ஒரு கோாிக்கை வைக்கிறேன் வாகர்களுக்கு வெகுமதி கிடைக்கும் வகையில் பல புதிய பகுதிகளை அறிமுகம் செய்யுங்கள் ,ஒரு படைப்பிற்கு நூறு ரூபாய் பரிசு போன்ற புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய வேணுமாய் வாசகர்கள் சாா்பாக கேட்டுக்கொள்கிறேன், 

அனைவருக்கும் அனைத்தும் கிடைத்திட வேண்டும், உழைப்பவரே உயர் ந்தவர், எல்லா புகழும் இறைவனுக்கே, என்ற அடிப்படையில் தமிழ்நாடு இ பேப்பருக்கு என இதய பூா்வமான நன்றியை தொிவிப்பதோடு தொிவித்து மகிழ்வதில் சந்தோஷம் கொள்கிறேன் இன்றும் என்றும் அன்புடன் தொடரும்



-வாசகி நா. புவனாநாகராஜன் செம்பனாா்கோவில்