தமிழ்நாடு இ பேப்பர் க்கு தலை வணக்கம் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சென்னையில் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பல்கலைக்கழக துணை வேந்தர் கூட்டம் ஏப்ரல் 17ஆம் தேதி வரை வெப்ப அலைக்கு வாய்ப்பு. மாணவர்களின் ஆதார் பதிவை துல்லியமாக மேற்கொண்ட தமிழக பள்ளி கல்வித்துறையை பாராட்டிய மத்திய அரசு. நலம் தரும் மருத்துவம்... பேரிக்காய் நன்மைகள் பேரிக்காயில் நீர் சத்து அதிகம் உள்ளதால் கோடை காலத்தில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நீர் சத்து கிடைக்கும். பேரிக்காய் ஜூஸ் செய்து குடிப்பதை விட துண்டுகளாக்கி மென்று தின்பதால் இதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். வாரத்தில் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து ரத்த ஓட்டத்தை சீராக்கும். பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளை குணப்படுத்தி ஒழுங்குபடுத்தும் நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் பேரிக்காய் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம்பெறும். மக்கள் வசிக்கும் இடங்களில் செல்போன் டவர்களை அமைப்பது தடுக்க வேண்டும். டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளில் வணங்குகிறோம் பல் சுவை களஞ்சியம் அருமையான பதிவு. வேப்பம்பூ பச்சடி......... பண்டிகை தினத்தன்று பச்சடி செய்வது நல்லது. பிஞ்சு மாங்காய், ஒரு பச்சை மிளகாய், ஒரு சிட்டிகை உப்பு, புது புளி, வேப்பம்பூ, வேப்ப துளிர், வெள்ளம், கசகசா 1 ஸ்பூன்.. முதலில் மாங்காய் கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் பிறகு புளி ஊற வைத்ததை தண்ணீராக கரைத்து வெள்ளம், உப்பு சிட்டிகை, பச்சை மிளகாய் 1, கசகசா, வெல்லம் அனைத்தும் சேர்த்து ஒன்றாக சேர்த்து ஊற வைத்து சாமி இடம் வைத்து கற்பூர ஆரத்தி காண்பித்து அனைவரும் சாப்பிடணும் . தெலுங்கு வருட பிறப்பு, தமிழ் வருட பிறப்புக்கு செய்வது வழக்கம் . சென்னையில் ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற மூன்ற பேர் கைது. கள்ளச் சாவியை பயன்படுத்தி இருசக்கர வாகனங்கள் திருடிய சிறுவன் கைது. இன்று பிறந்தநாள், திருமண நாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தினமும் எண்ணற்ற செய்திகளைத் தெள்ளத் தெளிவாக கொடுக்கும் கலர் வண்ண புகைப்படங்களுடன் எங்களுக்கு அளிக்கும் தமிழ்நாடு இ பேப்பர் ஆசிரியர் க்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
-நிர்மலா ஸ்ரீதர்
திருவண்ணாமலை