tamilnadu epaper

வாசகர் கடிதம் (நிர்மலா ஸ்ரீதர்)-20.04.25

வாசகர் கடிதம் (நிர்மலா ஸ்ரீதர்)-20.04.25


 விஸ்வகர்மா திட்டத்துக்கு எதிர்ப்பு ஏன் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் விளக்கம். கண்ணியத்துடன் செயல்பட வேண்டும் ஏப்ரல் 19 தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது காணொளியில் தோன்றிய கட்சியின் தலைவர் விஜய் பேசியது நெட்வொர்க் பிரச்சனை காரணமாக தான் பதிவு செய்யப்பட்ட இந்த செய்தியை அனுப்புகிறேன். நம்முடைய இந்த சமூக ஊடகப்படை தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய படை என்று கூறுகின்றனர். இனிமேல் நீங்கள் எல்லோரும் என்னுடைய சமூக ஊடக ரசிகர்கள் மட்டுமே கிடையாது. நம்முடைய தகவல் தொழில்நுட்ப அணி என்றாலே நாகரிகத்துடன் கண்ணியத்துடன் இருப்பார்கள் என்று அனைவரும் கூற வேண்டும் அதை மனதில் வைத்துக் கொண்டு அனைவரும் வேலை பாருங்கள் கூடிய சீக்கிரம் உங்கள் அனைவரையுமே நான் சந்திக்கிறேன். வெற்றி நிச்சயம் என்று விஜய் பேசினார். வாழ்த்துக்கள் இரட்டை இலைக்கு மேல் தாமரை மலர்ந்தே தீரும் நயினார் நாகேந்திரன் உறுதி. முதல் ஏசி மின்சார ரயில் சேவை தொடங்கியது. வரவேற்க கூடியது. தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் கோவை மாநகராட்சி அரசு பள்ளிகள்.... அருமை ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள். சிறுகதைகள் இரண்டு அற்புதம் அருமை மதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நன்னிலம் இளங்கோவன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் அருமை சிறுகதைகள். ஈஸ்டர் பண்டிகையின் சிறப்பு வாழ்த்துக்கள். தமிழ் சினிமாவில் நாயகனாக பாலா அறிமுகம் வாழ்த்துக்கள். கவிதைகள் அனைத்தும் அருமை. பன்முகம் அருமையான பதிவுகள் அனைத்தும்...நலம் தரும் மருத்துவம்.... நாவல் பழங்கள் விதை இலை மற்றும் மரப்பட்டைகளும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. ஈறுகள் மற்றும் பற்களில் பிரச்சனை உள்ளவர்கள் நாவல் பழத்தினை உட்கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும். சிறுநீரக கற்களால் கஷ்டப்படுபவர்கள் நாவல் பழத்தினை சாப்பிடுவதுடன் அதன் விதையை உலர வைத்து பொடி செய்து தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் கற்களானது கரைந்து விடும். இன்று பிறந்தநாள், திருமண நாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்  உள்ளது உள்ளபடி எங்களுக்கு தினமும் எண்ணற்ற செய்திகளை தெள்ளத் தெளிவாக கொடுக்கும் தமிழ்நாடு இ பேப்பர் ஆசிரியருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்  தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர்


-நிர்மலா ஸ்ரீதர்

திருவண்ணாமலை