வணக்கம்
21.04.2025 'தமிழ்நாடு இ பேப்பர். காம்' வழக்கம் போல் அனைத்துச் செய்திகளையும் தாங்கிய நாளிதழாக வெளிவந்திருக்கிறது.
தொகுதி சீரமைப்பு குறித்த முதலமைச்சரின் பேட்டி பல்வேறு விளக்கங்களைத் தெளிவாகத் தந்தது.
பாதம் தொழுவது சாலவும் நன்று என்று முன்னோர்கள் சொல்வதை எடுத்து இயம்பியது பாததரிசனத்தின் பலன்கள் கட்டுரை. பாதம் பணிவோம்.
பூலித்தேவன் கட்டுரை ஏற்கனவே வெளிவந்த போதிலும் மீண்டும் ஒருமுறை அவரைப் பற்றி அறியாதவர்களுக்கு உதவுவதாக இருந்தது. சங்கரன்கோவில் சென்றால் பூலித்தேவர் அறையை தரிசித்து வரலாம்.
கால்வலிக்கு குட் பை ஆரோக்கியமான கட்டுரை. வாழைப்பழங்கள் சாப்பிட்டு உடல் எடையைக் குறைக்க இயலும் என்பது நமது விரத முறையை நினைவூட்டியது.
வெளிநாட்டில் ஐஸ் ஆப்பிள் எனும் பெயரில் நமது பாரம்பரிய நுங்கு விற்பனை செய்யப்படுவதில் மகிழ்ச்சி. தொடர்ந்து பனை பயிரிட பாதுகாக்க உதவும்.
அரிசியால் உண்டாகும் புற்றுநோய் . இந்தியா உள்ளிட்ட நாடுகள் பாதிப்பு. ஆய்வில் அதிர்ச்சி எனும் செய்தி கவனம் கொள்ள வேண்டிய ஒன்று. வரும் முன் காத்திட ஆராய்ச்சியை துரிதப்படுத்த வேண்டும்.
-தாணப்பன் கதிர்
( ப. தாணப்பன் )