வணக்கம் !
தமிழக மக்கள் நீண்ட நாட்களாக யூகித்துக் கொண்டிருந்த அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது.
எதிரணிக்காரர்கள் தங்கள் தேர்தல் வியூகத்தை பலப்படுத்துவதற்காக இது பயன்படும்.
தமிழகத்தில் போதை பொருட்களை விற்பனை செய்த குற்றத்துக்காக நைஜீரியா மற்றும் சூடான நாடுகளை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
வெளிநாட்டு போதை வியாபாரிகள் தமிழ்நாட்டை தங்களுடைய விற்பனைக் களமாக மாற்ற அனுமதிக்க கூடாது,
பத்திரிகையில் நான் முதலில் படிப்பது " நலம் தரும் மருத்துவம் " பகுதி தான். அதில் இன்று சுண்டைக்காயின் அருமை பெருமைகள் விளக்கப்பட்டு இருக்கிறது.
ராமேஸ்வரம் அருகே தனியார் பள்ளி ஒன்றில் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் ( AI )
( செயற்கை நுண்ணறிவு )
மூலம் இயங்கும் ஒரு ரோபோ ஆசிரியை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறார். நாமும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு இது ஒரு உதாரணம்.
போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மொபைல் போனில் ஒரு " ஆப் " பை (APP ) தங்களது விற்பனைக்கு பயன்படுத்துகிறார்கள் என்று அதிர்ச்சி செய்து அறிந்தேன்.
உடனடியாக அந்த ஆப்பை தடை செய்து அவர்களது சமூக சீரழிவு வியாபாரத்திற்கு " ஆப்பு " வைக்க வேண்டும்.
அமித் ஷா பேசுவதை பார்த்தால் வரப்போகும் தேர்தலில் " டெல்லி பாணி " யை தமிழகத்தில் பயன்படுத்துவார் போல தோன்றுகிறது.
-வெ.ஆசைத்தம்பி
தஞ்சாவூர்