tamilnadu epaper

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி)-13.04.25

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி)-13.04.25


ரஷ்யாவுடன் கடுமையாக போரிட்டுக் கொண்டிருக்கும் உக்ரைன் நாட்டுக்கு ஐயாயிரம் கோடி ரூபாய் நிதி உதவியை ஐரோப்பிய நாடுகள் வழங்கி இருக்கின்றன. உக்ரைன் சும்மா இருந்தாலும் கூட ரஷ்ய நாடு தாக்குதலை கடுமையாகக் கொண்டு வரும் இக்காலகட்டத்தில் இந்த ஆதரவு பேருதவியாக இருக்கும்.


பாகிஸ்தானில் பயங்கரவாத தளபதி சுட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக செய்தி படித்தேன். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை இந்தியாவுக்கு அனுப்பி தொல்லை கொடுத்து வந்த பாகிஸ்தான் நாடு பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறது என்றால் தீவிரவாதிகளால் அந்த நாடு எவ்வளவு பாடுபட்டிருக்கும்.என்பது புரிந்து கொள்ளலாம். 


"அதிமுக - பாஜக கூட்டணி

என்பது தோல்விக் கூட்டணி"

என்று முதலமைச்சர் கூறி இருக்கிறார். எது நடக்கக் கூடாது என்று நினைத்தாரோ அது நடந்து விட்டது.


பாஜக நாற்பது தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அதன் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார்.  மக்கள் இப்போதெல்லாம் ஆளைப் பார்த்து ஓட்டு போடுவது இல்லை. வேட்பாளர் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்தையும் தேர்தல் வாக்குறுதிகளையும் பொறுத்தே ஓட்டு போடுகிறார்கள்.


ஆளுநரால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களை குடியரசுத் தலைவர் மூன்று மாதத்திற்குள் பைசல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெடு விதித்து இருக்கிறது.  இந்த கெடு சுமூகமான நடைமுறைக்கு வழி வகுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 


கவர்னரால் கிடப்பில் போடப்பட்டிருந்த தமிழக அரசின் பத்து மசோதாக்களும் சட்டமாகி விட்டதாக உச்ச நீதிமன்றம் அறிவித்த பிறகு அந்த பத்து மசோதாக்களையும் நிறைவேற்றப்பட்டவை என அரசிதழில் வெளியிட்டு இருக்கிறது தமிழக அரசு.


இது கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய சட்டசபைக்கே சட்டம் இயற்றுவதில் அதிக அதிகாரம் உண்டு என்பதை உணர்த்துகிறது. 


இன்ஸ்டாகிராமில் இளம் பிராயத்தினர் அனைத்து அம்சங்களையும் பார்க்கும் வழக்கத்துக்கு முடிவு கட்டப்படுகிறது. மைனர்களுக்கு என்று தனியாக இன்ஸ்டாகிராம் செயல்படும். அவர்கள் பெரியவர்கள் பார்க்கும் அத்தனை அம்சங்களையும் பார்க்க முடியாது பயன்படுத்த முடியாது என்று META நிர்வாகம் கூறியிருக்கிறது. இது வரவேற்கத்தக்கது.


 -வெ.ஆசைத்தம்பி

 தஞ்சாவூர்