வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியை சந்திக்கும் " என்று மத்திய அமைச்சர்  எல்.முருகன் பேசியிருக்கிறார்.

அவரது பேச்சை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் கொஞ்சம் அதைப் பற்றி" />

tamilnadu epaper

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி)-20.04.25

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி)-20.04.25


 " வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியை சந்திக்கும் " என்று மத்திய அமைச்சர்  எல்.முருகன் பேசியிருக்கிறார்.

அவரது பேச்சை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் கொஞ்சம் அதைப் பற்றி சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது ஆளுங்கட்சிக்கு அவசியமான ஒன்றாகும்.


டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை வீட்டுக்கு அனுப்பி விட்டு பாஜக ஆட்சியைப் பிடித்த வரலாற்றை நாம் மறந்து விடக்கூடாது.


தேர்தல் நேரத்தில் மடியில் கனம் இருக்கும் பல எதிர்க்கட்சி குட்டி தலைவர்கள் விசாரணைக்கு பயந்து பாஜக பக்கம் வருவதை தவிர்க்க முடியாது.

ஒரு கட்சியை உடைப்பது எப்படி என்பதில் " டாக்டரேட் " செய்து இருப்பவர்கள் பாஜகவினர். அவர்களை லேசாக எடை போடக்கூடாது.


மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்திற்கு போட்டியாக கலைஞர் கைவினை திட்டம் என்ற ஒரு திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கியிருக்கிறார். அது எவ்வளவு சிறப்பாக நடக்கும் என்பது போக போகத்தான் தெரியும்.


நாடு முழுவதும் பிரதமரின்        " ஜன் அவுஷதி "  மருந்து கடைகள் மிகக் குறைந்த விலையில் மக்களுக்கு மருந்து மாத்திரைகளை வழங்கி சிறப்பான அரிய தொண்டாற்றி வருகின்றன.

குறைந்த விலையில் மருந்து மாத்திரைகளை வழங்கும் மத்திய அரசின் திட்டம் மகத்தான வெற்றியைப் பெற்று இருக்கிறது.


அதற்கு போட்டியாக தமிழக அரசால் முதலமைச்சரின் மலிவு விலை மருந்து கடைகள் பல இடங்களில்

திறக்கப்பட்டு இருக்கின்றன.

ஆனால் அந்த கடைகளை நடத்துபவர்கள் சரியான முறையில் தங்கள் கடைகளுக்கு மருந்து சப்ளை செய்யப்படுவதில்லை என்றும் தங்களது கடைகள் நஷ்டத்தில் நடப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் குமுறுகின்றனர்.


மத்திய அரசின் திட்டங்களுக்கு இணையாக மாநில அரசும் வேறு பெயரில் ஒரு திட்டத்தை ஆரம்பித்து நடத்தும் போட்டி மனப்பான்மையை விட்டு  விட்டு மக்களுக்கு புதிதாக ஏதாவது நன்மை செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும்.


மதிமுகவின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து வைகோவின் மகன் துரை வைகோ விலகி இருக்கிறார். அவருக்கு எதிரான உட்கட்சி வேலைகள் அங்கு நடந்திருக்கின்றன என்பதையே இது காட்டுகிறது. எப்படியோ நிறுவன தலைவரின் மகன் பதவி விலகுவது என்பது அந்த கட்சியில் ஜனநாயகம் இருப்பதையே காட்டுகிறது,


மத்திய பிரதேசத்தில் மாணவர்களுக்கு மதுபானம் வழங்கிய அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

மாணவர்களை நல்ல குடிமகன்களாக உருவாக்குவதற்கு அவருடைய பாணியில் "குடி " யை ஊற்றி கொடுத்திருக்கிறார் போலும்.


சென்னை கடற்கரை செங்கல்பட்டு இடையே ஏசி மின்சார ரயில் சேவை தொடங்கி இருக்கிறது. 

இந்த ஏசி ரயிலில் பயணிப்பதற்கு தனி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.


ஏசி என்பது ஒன்றும் பெரிய அறிவியல் அதிசயம் இல்லை, இதற்காக தனியாக கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது. படிப்படியாக அனைத்து மின்சார ரயில்களையும் ஏசி வசதி உள்ள ரயில்களாக மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.

  

 -வெ.ஆசைத்தம்பி

தஞ்சாவூர்