மு. மதிவாணன் எழுதிய, ' தண்டனை', முகில் தினகரன் எழுதிய,'பொய்க்கு பொய்யே மருந்து' சிறுகதைகள் மிகவும் அருமை.
எட்டு தலவிருட்சங்கள் கொண்ட திருவிசைநல்லூர் சிவயோகநாதர் கோவில் பற்றித் தெரிந்து கொண்டோம்.
சிவப்புத் தங்கம் என்று அழைக்கப்படும் மிகவும் சக்தி வாய்ந்த மசாலாப் பொருளான குங்குமப்பூவின் நன்மைகளைத் தெரிந்து கொண்டோம்.
கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் வேம்பாளம்பட்டை எண்ணெய் தயாரிக்கும் முறையை அறிய முடிந்தது.
தி. வள்ளி எழுதிய, 'மரகதக் கணையாழி' நூல் விமர்சனம் மிகவும் அருமை. நூல் ஆசிரியர் ஜே. செல்லம் ஜெரினா அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
-பார்வதி நாகமணி.