மரத்தில் பறித்த மலர்கள் மணம் வீசினாலும் மாலையில் வாடிவிடும்!
உன் மனம் வீசும் அன்பின் மகம் எப்போதுமே வாடா மலர்தானே!
பூக்கள் மீண்டும் மீண்டும் பூத்துக் குலுங்கும் ஆனால் வாடிவிடும்
உன் முகத்தில் பூக்கும் புன்னகை எந்நாளும் எனக்கு சோர்வை போக்கும்
பூக்களும் அழகு பூவையும் அழகு வாடாத வரையில்தான் வசந்தம் தரும்!
-வி. பிரபாவதி
மடிப்பாக்கம்