tamilnadu epaper

வாழ்வின் வெளியில்

வாழ்வின் வெளியில்

 

 

  அந்த ஊரில் முருகனை தெரியாதவர்கள் யாரும் கிடையாது அதுவும் பேப்பர் முருகன் என்றால் எல்லாருக்கும் பரிட்சயம்.

     அந்த ஏரியாவில் கங்கா நியூஸ் ஏஜென்சி எனும் பெயரில் அனைத்து நியூஸ் பேப்பர்களையும் விநியோகிக்கும் உரிமை பெற்றிருந்தார்.

     இரண்டு பையன்களை பகுதி நேர சம்பளத்துக்கு நியமித்து சிறப்பாக நடத்தி வருகிறார்.

    அவருக்கு அருள் எனும் பால்ய கால நண்பன் ஒருவன் உண்டு அவன் கலெக்ட்ரேட்டில் ஜூனியர் 

அஸிஸ்டெண்டாக பணியாற்றி வருகிறான்.

    அருளுக்கு நிறைய நண்பர்கள் கிடையாது, அதிகம் பேச மாட்டான், மாத சம்பளம் வந்ததும் டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு சென்று வீட்டுக்கு தேவையான சகலத்தையும் வாங்கி வந்து விடுவான்.

    முருகனுக்கு அது பிடிக்காது உழவர் சந்தை பிடிக்கும், தனியாய் கீரை விற்கும் பாட்டியை பிடிக்கும், தள்ளுவண்டி டிபன் கடைகள் பிடிக்கும். 

   முருகன் தினம் பல முகங்களை நேருக்கு நேர் பார்த்து பேசி பழகி வருபவன்.

    அருள் அப்படி அல்ல வீடு ஆபிஸ் டிபார்ட்மண்ட் ஸ்டோர் இதுதான் அவன் உலகம் செகிழுக்கும் மாடு போல வாழ்வு சலிப்பை அள்ளி கொடுத்தது.

    இதை உணரந்த நண்பன் அருள் "டேய் முருகா வாழ்வு பெரிது நேசிக்க. பேச மக்கள் கூட்டம் அதிகம் இருக்கிறது சுருங்கி போகாதே" என்றான்.

     "ஆமாடா ஒரே மாதிரி வாழ்வு பார்த்த முகங்களே தினமும் தரிசனம்" என்றான்.

     "ஒன்னு சொல்லட்டுமா பெரிய மால்ல போனா ஒரே இடத்தில எல்லாம் கிடைக்கும் ஏதோ ஒரு நாள் அது சரி வழக்கமாக்குவது எனக்கு பிடிக்காது"

     "ஒரே இடத்தில் அலையாமல் வேண்டியதை வாங்க அதை விட அருமை எங்கே" என்றான் அருள் 

    அதற்கு முருகன் "உணர்வுபூர்வமான உலகில் ஏராள தெரு மனிதர்கள் உண்டு மால்ல சொல்லும் அதிக விலை பேரம் பேசாமல் கொடுத்தாக வேண்டும்.

    தொடர்ந்தான் "தெருவில் கீரை விற்கும் பாட்டியிடம் அப்படி அல்ல உரிமையாய் சண்டை போடலாம் இரக்கப்பட்டு ஐந்து ரூபாய் கூட்டி தரலாம் பழகுடா மனசு லேசாகும்"

     அருள் தலையாட்டினான்

   "என்னைய பாரு முடிவெட்ட, காய் வாங்க என ஒவ்வொரு கடை அவர்களை அடிக்கடி சந்திக்கிறேன் நிறைய பேசுகிறேன் அவர்கள் ரெகுலர் கஸ்டமராக மட்டுமல்ல அவர்கள் வீட்டில் ஒருவராகவே பார்க்கிறார்கள் நிறைய உறவு கூட்டங்கள் பேச உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வெளியே இருக்கிறது"

     அவன் பேச்சில் அருளுக்கு புது வெளிச்சம் பிறந்தது 

      "இன்னைக்கு கடலை எண்ணெய் வாங்க வேண்டும் செட்டியார் என் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார் வா போய் பழகலாம்" என அழைத்து தன் ஸ்கூட்டியின் பின்சீட்டில் அருளை உட்கார சொன்னான்.

  செட்டியார் தன் மகளின் திருமண பத்திரிக்கையை இன்று முருகன் கடைக்கு வந்ததும். கொடுக்க வேண்டும் அவன் எனக்கு மூத்த மகன் மாதிரி என மனதுக்குள் பேசியவாறு ஆவலோடு அவனுக்காக காத்திருந்தார்.

 

 

கவிமுகில் சுரேஷ்

தருமபுரி