" டியர் ஸ்டூடண்ட்ஸ்! விஞ்ஞானியர் வரிசையில் இன்று தாமஸ் ஆல்வா எடிசன், ஐன்ஸ்டீன், அலெக்ஸாண்டர் ப்ளெமிங், இவர்கள் பற்றி நான் உங்களுக்குச் சொன்னேன். அடுத்த வகுப்பிற்கு நீங்கள் வரும்போது நூலகத்தில் இருந்து சஞ்சிகைகள், புத்தகங்களைப் படித்து நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு விஞ்ஞானி பற்றி பத்து வரிகளுக்கு மிகாமல்; கட்டுரை எழுதிக் கொண்டு வாருங்கள்" என்று மைதிலி மிஸ் தன் வகுப்பை முடித்தாள்.
மூன்றாம் வகுப்பு படிக்கும் லட்சித் உடனடியாக நூலகம் போய் புத்தக அலமாரியில் தேடிக்கொண்டே இருந்தான்.
வெகு நேரமாக அவன் தேடிக் கொண்டே இருந்ததைப் பார்த்து நூலகர்; என்ன புத்தகம் வேண்டும் உனக்கு என்று கேட்டார்.
" சார்! கருத்த பாண்டியன் என்ற விஞ்ஞானி பற்றி புத்தகம் தேடுகிறேன்." என்றான், லட்சித்.
அந்தப் பெயரில் ஒரு விஞ்ஞானி இருப்பதாகத் தான் கேள்வி பட்டதே இல்லை என்று அவர சொன்னார். என் தாத்தா கருத்தபாண்டியன், பெரிய விஞ்ஞானி. நிறைய பரிசு எல்லாம் பெற்றுள்ளார். அழகப்பா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். அவரைப் பற்றி ஒரு புத்தகம் கூட இங்கு காணோம்; என்று நூலகரின் கை பேசியில் அவரைத் தேடித் தரச் சொல்லி; தன் பாட்டனார் பற்றி ஒரு கட்டுரை எழுதி கொண்டு போனான்
மறுநாள் வகுப்பில் அவன் தன் தாத்தாவைப் பற்றிக் கூறி அவன் எழுதினக் கட்டுரையைப் படித்து அனைவரின் பாராட்டுதலையும் பெற்றுப் பெருமிதம் அடைந்தான்,சுட்டிப் பையன் லட்சித்.
சசிகலா விஸ்வநாதன்