tamilnadu epaper

விடிவெள்ளி!

விடிவெள்ளி!


நீர் சிலுவையில்...

அறையப்பட்டு

இரத்த சாட்சியாய்

மரித்த இந்நாளில் 

மன்னியும் முதலில் 

என்னையும்

இயேசப்பா 

மன்னிப்பு கேட்கிறார்கள்...

பாவத்தில் தினம் 

செத்து பிழைக்கும்

பாதகர்கள்

என் கன்னத்திலும்

அறைந்திட்டு என்னிடமே

நான் மன்னித்தாலும்...

மறுபடியும்

பாவத்தில் வீழ்வார்கள்

எதிர்த்தாலும்

துரோகத்தை செய்வார்கள் 

பாவமோ துரோகமோ?

எப்போதும் 

எதோ ஒன்றை செய்ய 

நினைப்பவர்களை

தவிக்கிறேன் 

இயேசப்பா நானும் 

எதுவும் செய்ய முடியாமல்!

நீர் பாவத்திற்கு...

புனித வெள்ளியன்று

மரித்து ஈஸ்டர் நாளில் 

உயிர்த்தெழுந்தாலும்

ஒவ்வொரு தேசத்திலும்

வாழும் பாவிகள்

தங்களின் 

தவற்றை உணர்ந்து

மனம் திருந்தாதவரை...

எனக்கு மட்டுமல்ல

யாருக்கும் 

எந்த ஊருக்கும் ஏது 

என்றும் விடிவெள்ளி?


-ஜெ.ம.புதுயுகம்

பண்ணந்தூர்