முன்னேறுவோம் முன்னேற்றுவோம் பாரதத்தை
பாரதத்தின் பாரம்பரிய பெருமைதனை பறைசாற்றும் கவித்துவம் வாய்ந்த சீர்மிகு பாடல்கள்
பாடல்கள் தந்திடும் பாங்கான சுவையான கவர்ந்து இழுக்கும் நேர்மிகு கருத்துகள்
கருத்துக்களை மதித்து காதுகொடுத்துக் கேட்டிடும் யாவரும் நிச்சயம் பெற்றிடுவார் பெருவாழ்வு
பெருவாழ்வு அமைந்திட நல்வழியைப் பின்பற்றி நடந்திட்டால் பாங்காய் கிடைத்திடும் பெருவுயர்வு
பெருவுயர்வு எட்டாக் கனியெனினும் தெளிவான சிந்தனையுடன் அடைந்திடத் தேவை விடாமுயற்சி
விடாமுயற்சி ஒவ்வொரு செயலிலும் இருந்திடக் கடவுளின் துணையுடன் கிட்டிடுமே பெருவெற்றி
பெருவெற்றி என்னவோ ஒரே நாளில், ஒரே முயற்சியால் யாருக்கும் கிடைப்பதில்லை அறிவீரோ மானிடரே
மானிடரே வாழ்வில் வென்றிடப் படிப்படியாக உயரத் தொடங்க வேண்டும் உங்கள் பயணம்
பயணம்
என்பது கடினமோ, எளிதோ தொடருங்கள் விரைவாக உணர்ந்திடலாம் வெற்றி அனுபவம்
அனுபவம் வழிகாட்டும் திசையில் கைப்பிடித்து உயர்ந்தால் காணலாம் வெற்றி பாரதம்...
-Tmt.Malliga gopal
Puducherry