tamilnadu epaper

வேப்பம்பூ பச்சடி

வேப்பம்பூ பச்சடி


தேவையான பொருட்கள்-


1) மாங்காய் - ஒன்று 

2) கருப்பட்டி - ஒரு கப் 

3) ஏலக்காய் - சிறிதளவு

4) பச்சை வேப்பம்பூ - சிறிதளவு

5) நெய் உப்பு, கடுகு - தேவையான அளவு 

6) பச்சை மிளகாய் - 2



செய்முறை - மாங்காவை தோலை சீவி அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு இரும்பு சட்டியில் சிறிது நெய் ஊற்றி கடுகு தாளித்து அதில் வெந்த மாங்காயை நன்றாக மசித்து போட்டு கருப்பட்டியை போட்டு கிளரவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது கீழே இறக்கி வைத்து நெய்யில் பச்சை வேப்பம் பூவை தாளித்து போட்டால் சுவையான வேப்பம்பூ பச்சடி தயார். தமிழ் புத்தாண்டில் இனிப்பு புளிப்பு, கசப்பு காரம் என்ற அனைத்து சுவைகளும் நிறைந்த இந்த பச்சடியை செய்து கடவுளுக்கு நைவேத்தியம் செய்வர் 


-உஷா முத்துராமன்