பூஜாவுக்கு ஷாப்பிங் போறதுன்னா கொள்ளைப்பிரியம். ஒவ்வொரு பொருளையும் நின்று ரசித்து நிதானித்து பொறுமையாகத்தான் வாங்குவாள்.
பூஜா எவ்வளவு கோவமாக இருந்தாலும் அவளை எளிதாக சமாதானப்படுத்த எளிய வழி இந்த 'ஷாப்பிங்' தான்!
இன்றும் உற்சாகமாகத்தான் ஷாப்பிங் கிளம்பினாள்...
ஏனோ ..
ஏதோ வருத்தம் ஏற்பட்டுவிட்டது
ஷாப்பிங் போயிட்டு வந்த வேகத்தில் படுக்கை அறையில் முகத்தை திருப்பிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
"பூஜா இதைப்பாரு! அப்படி என்ன சொன்னேன்னு இப்படி முகத்தை திருப்பிக்கிறே...
நீ என்னை விளையாட்டா எவ்வளவோ தரைலோக்கலா கலாச்சிருக்கே!..
அப்பெல்லால் நான் எவ்வளவோ பொறுமையா..ஏன்..நீ செல்லமா சொல்லுவேயே அப்படி 'எருமை!'யாக்கூட இருந்திருக்கேன். "
பூஜா எதுவும் பேசாமல் மௌனமாகவே இருந்தாள்.
" இன்னிக்கு பசி அதான் பாதியிலேயே...உன்னை எதுவும் முழுசா ஷாப்பிங் பண்ண விடாம ..தடுத்து அவசரம் அவசரமா கூட்டிட்டு வந்துட்டேன்.
ஸாரிடா..நாளைக்கு எவ்வளவு நேரமானாலும் ஷாப்பிங் பண்ணு!..நான் கூடவே நாய் மாதிரி கிடக்கிறேன்!..ஓ.கே.வா?
... என்றவுடன்.
" இது உங்க வீடு இல்ல தோழி! ' தோழி விடுதி!.'.சரிதான் வாடி!..ஓவரா..மூஞ்ச
நக்காதே!..என்று புன்முறுவள் பூத்தாள் பூஜா."
பிரியமான...தோழியும் அவளைக்கட்டிக்கொண்டாள்.
-- அய்யாறு ச.புகழேந்தி