காலையிலிருந்து வரிசையாக தொலைபேசி அழைப்பு அழைப்புகள் கைப்பேசி அழைப்புகள் whatsapp குரூப் செய்திகள் என வரிசையாக புத்தாண்டு வாழ்த்து செய்திகள் வந்து கொண்டே இருந்தது ரிங்டோன் சத்தம் தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டே இருந்ததில் டென்ஷனாகிப் போனார் அப்பா
"என்னடா இது எப்ப பாத்தாலும் ஒரே போன் இரைச்சல் சத்தம் பேசிக்கொண்டே இருக்க நீ இன்னைக்கு புத்தாண்டு இன்னிக்கு ஒரு நாளாவது போன் பேசாம இருக்க கூடாதா உன்னிடம் சொல்லி சலிச்சு போச்சுடா" என எரிந்து விழுந்தார் அப்பா
இது வழக்கமான ஒன்றுதான் என எதிர்பார்த்த நான் அதை கடந்து வெளியில் வந்து நண்பர்களோடு புத்தாண்டு வாழ்த்து செய்திகளை பரிமாறிக் கொண்டேன் இடையே உள்ளே அம்மாவின் சத்தம் வேறு என்னவென்று உள்ளே பார்த்தபோது அம்மாவிற்கு அப்பாவிற்கு அப்படி ஒரு சண்டை.
"இன்னைக்கு புத்தாண்டு இன்னைக்காவது ஒரு ஸ்பெஷல் ஐட்டம் செஞ்சியா இதே உப்புமா இதே கேசரி இதே காபி என்ன காம்பினேஷன் இது?" என எதிரி குதித்தார் அப்பா.
புத்தாண்டு அன்று என்ன சொல்வது எதையாவது சொல்லி புத்தாண்டு அதுவுமா க்கு அவர் வாயில் சாபம்களையோ திட்டுகளையும் வாங்கிக் கொள்ளத் தெம்பு இல்லாமல் அம்மா மெளனமாக கடந்தார்.
"கொஞ்சம் நில்லுங்கப்பா "என்று அவரிடம் சென்றேன் நான் "என்னடா" என்றார் எதுக்கு காலையிலிருந்து இப்படி கத்திட்டு இருக்கீங்க தினமும் தான் கத்துக்கிட்டு இருக்கீங்க இன்னைக்கும் ஏன் கத்துறீங்க அப்பா ?"
"புத்தாண்டு அன்னைக்கு ஏதாவது மாற்றம் நம்ம வீட்ல இருந்ததாடா 2023 முழுக்க ஒரே சண்டை சச்சரவு மன உளைச்சல் தான் . இன்னைக்கு 2024 இன்னைக்கும் உங்க அம்மா காலையிலேயே ஆரம்பிச்சிட்டா நீ அதுக்கு முன்னாடியே ஆரம்பிச்சுட்ட போன் எடுத்துக்கிட்டு கோவம் வராதா எனக்கு" என்றார்
"ஸோ புத்தாண்டில் இருந்து உங்களுக்கு ஒரு மாற்றம் தேவை அதானப்பா நீங்க எதிர்பார்க்கிறீங்க" என்று நான்
"ஆமாடா கண்டிப்பா வருஷா வருஷம் புத்தாண்டு உறுதிமொழிகள் அப்படின்னு சில பேர் எடுப்பாங்க ஆனால் செய்றது இல்ல ஆனா செய்யணும் நான் செஞ்சுகிட்டு தான் வரேன் ஆனா எனக்கு ஒத்து வர மாட்டீரீங்களே நீயும் உங்க அம்மாவும் "சலித்துக் கொண்டார் அப்பா.
"நீங்க என்னப்பா புத்தாண்டு உறுதிமொழி எடுத்தீங்க போன வருஷம் அதை கடைபிடிச்சீங்களா "
"கண்டிப்பா சிகரெட்டை விடனும் நினைச்சேன் கொஞ்சம் கொஞ்சமா விட்டுட்டேனே இப்ப ஒரு நாளைக்கு ஒரு சிகரெட் தான் அடிக்கிறேன் "
" நீங்க சிகரெட்டை விடறதுக்கு கூட ஒரு புத்தாண்டு வேன்டும். ஒரு வருஷம் காத்திருக்கணும் அப்படித்தானே ஏன் இன்னையோட சிகரெட்டை விடுறேன்னு அப்பவே நீங்க முடிவு பண்ணி சுத்தமா விட்டு இருக்கலாமே ஆனா அது உங்களால முடியாது ஏன்னா சிகரெட்டை விடனும் நீங்க நினைக்கல அதே மாதிரி தான் வீட்ல அம்மா கிட்ட என்கிட்ட சண்டை போடக்கூடாது எரிஞ்சு விழக்கூடாதுன்னு நீங்க நினைக்கல நினைங்கப்பா அதை இப்பவே நினைங்க
உங்களோட புத்தாண்டு சபதம் உறுதிமொழி எல்லாமே உங்க கெட்ட பழக்க வழக்கங்கள் நல்ல பழக்க வழக்கங்கள் ஆரம்பிச்சு வைக்கிறது இது மாதிரி தான் இருக்கு.இந்த வருஷம் ஒரு வித்தியாசமா ஒரு புத்தாண்டு உறுதிமொழி எடுத்துக்கோங்க "
"என்னடா ராஜா குழப்புற "என்றார் அப்பா
"குழப்புலப்பா எனக்கும் விவரம் தெரிஞ்ச நாளிலிருந்து பார்க்கிறேன் தினமும் எந்திரிச்ச நிமிஷத்திலிருந்து ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வர நிமிஷம் வரைக்கும் நீங்க எரிஞ்சு விழுந்துகிட்டு தான் இருக்கீங்க அம்மாகிட்ட என்கிட்ட
புத்தாண்டுன்னா நாலு பேரு விஷ் பண்ண தான் செய்வாங்க நாமளும் நாலு பேருக்கு விஸ் பண்ண தான் செய்யணும் அதே உப்புமா பொங்கலையும் அதே சாம்பாரையும் அதே காபியையும் குடிக்கிறதுல மாற்றம் வரக்கூடாது அதுதான் மாற்றம்னு நினைக்க கூடாதுப்பா .. புத்தாண்டுல நம்மளோட குணத்துல வரணும் மாற்றம் தேவைப்படுற விஷயங்களுக்கு நாம கண்டிப்பா அதற்கான நேரம் கொடுக்கணும் தேவைப்படுறவங்களுக்கு அவங்களோட பேச பழக புரிஞ்சுக்க நேரம் கொடுக்கணும் நமக்கு முக்கியம் னு நாம தான் முக்கியம் என்று இருக்கிற சிலருக்கு சில மணித்துளிகள் ஒதுக்கணும் அந்த மணித்துளிகளையும் எரிச்சலாவும் கோபாமாவும் சத்தமாகவும் சண்டையாகவும் போய்கிட்டு இருக்கு நம்ம வீட்டுல.. தயவு செஞ்சு இந்த புத்தாண்டு உறுதிமொழியா இதை எடுத்துக்கோங்க இனி என்னைக்குமே எரிச்சலோ சண்டையோ கோபமோ தேவையில்லாத விஷயத்துக்கு டென்ஷனும் ஆக மாட்டேன் அப்படின்னு.. இத நீங்க கடைபிடிப்பீங்களானு தெரியல ஆனா ட்ரை பண்ணுங்க மாற்றம் என்பது புத்தாண்டு எடுக்கிற உறுதி மொழியில இல்ல அது நம்ம கிட்ட இருந்து தான் வரணும் அந்த மாற்றம் புத்தாண்டுக்கு தான் வரணும்னு இல்ல எப்போ வேணா வரலாம் முடிஞ்சா இன்னைல இருந்து வாங்க முடியலையா நாளைல இருந்து கூட வாங்க இல்ல அடுத்த மாசம் இல்ல அடுத்த வருஷம் எப்போ வேணா கொண்டு வாங்க .. ஆனா மாற்றம் வரணும் உங்களை மாத்திக்கங்க.. அதுதான் உண்மையான புத்தாண்டு "ஹாப்பி நியூ இயர் அப்பா" என அவருக்கு கை கொடுத்து விட்டு வெளியே வந்து வண்டியில் ஏறி பின் இனிமேல் ஹெல்மெட் போடாம வண்டில போகக்கூடாது என முடிவெடுத்து திரும்ப வீட்டினுள் வந்து ஹெல்மெட்டை எடுத்து தலையில் மாட்டிக் கொண்டு கிளம்பினேன் நான்.
#########
நீங்களும் ட்ரை பண்ணுங்களேன் இப்படிக்கு உங்கள் நான்
ஜனனி அந்தோணி ராஜ்
திருச்சிராப்பள்ளி