tamilnadu epaper

ஹோலி கொண்டாட்டத்தில் மோதல்: பெங்களூரில் 3 பேர் அடித்துக் கொலை

ஹோலி கொண்டாட்டத்தில் மோதல்: பெங்களூரில் 3 பேர் அடித்துக் கொலை

பெங்களூரு, மார்ச் 16

கர்னாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது குடிபோதையில் நடந்த சண்டையில் 3 பேர் கொல்லப்பட்டனர்.


பீகாரில் உள்ள ஒரே கிராமத்தைச் சேர்ந்த 6 தொழிலாளர்கள் அனேகல் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு 6 பேரும் அதே கட்டிடத்தில் மது அருந்தி கொண்டாடி உள்ளனர்.


அப்போது பேச்சுக்கிடையில் ஒரு பெண்ணைப் பற்றி தகாத கருத்து கூறப்பட்டபோது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது சண்டையாக மாறி அவர்கள் ஒருவரையொருவர் மரக் குச்சிகள் மற்றும் இரும்பு கம்பிகளால் தாக்கிக்கொண்டனர். இதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். உயிரிழந்தவர்கள் அன்சு, ராதே ஷ்யாம் மற்றும் தீபு என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


காயமடைந்த ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் மற்ற இருவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.