tamilnadu epaper

_சின்ன சூட்சுமம் ஒன்று இருக்கிறது

_சின்ன சூட்சுமம் ஒன்று இருக்கிறது

 

 

எப்பொழுதும் வெளி உலகையே பார்த்து கொண்டு இருக்கும் நாம், நம்முள் பார்க்க வேண்டும். நம் உடல் நாமல்ல. பின் நாம் யார்? என்ற வினாவோடு உள்ளே பார்க்கத் தொடங்கினால் போதும். எல்லாம் புரிந்து விடும்.

 

உள்ளே பார்க்கத் தெரிந்து விட்டால், எல்லாம் அவனே என்ற சூட்சுமும் புரிந்து விடும்.

 

இதே போலதான் தனிமையும்.

 

தனியாக உட்கார்ந்து கொண்டு இருப்பதல்ல.

 

தன்னை உணர்வது. தன்னை பார்ப்பது. எவ்வளவு பெரிய கூட்டத்திலும் சம்பந்தமே இல்லாமல் தனித்து இருப்போம்.

 

மெளனம் இயல்பாக அமைந்து நமக்குள் சத்சங்கம் ஆரம்பித்து விடும். உள்ளிருக்கும் இறையே தலைமை தாங்கும்.

 

ஆரம்பம் Just நம்முள் நாம் பார்ப்பதே. தியானம் உதவும். அலைபாயும் மனதை கட்டுக்குள் கொண்டு வந்து விடும்.

 

எந்த நிர்பந்தமும் இல்லாமல், 

இயல்பாக விசாரம் செய்யுங்கள்.

 

எல்லாமே கைக்கு எட்டும் தூரத்தில்தான்.

 

 

??