புதுடெல்லி, மார்ச் 18–
மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், 2047-ம் ஆண்டிற்குள் 'வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நிலையை அடைவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
* வளர்ச்சியை மதிப்பிடுவதற்கும், சமூக-பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும், மத்திய திட்ட செயலாக்க அமைச்சகம், சுகாதாரம், கல்வி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு சமூக-பொருளாதார அம்சங்களில் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில, யூனியன் பிரதேச அளவில் மாதிரி கணக்கெடுப்புகளை நடத்தியுள்ளது.
*கால தாமதத்தைக் குறைக்க, தரவு சேகரிப்புக்கான மாதிரி கணக்கெடுப்புகளை சரிபார்க்கும் நடைமுறைகளுடன் கூடிய டிஜிட்டல் தளங்களை அமைச்சகம் பயன்படுத்துகிறது.
* மொத்த உள்நாட்டு உற்பத்தி, நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் தொழில்துறை உற்பத்திக் குறியீடு போன்ற முக்கிய பொருளாதாரக் குறியீடுகளின் மதிப்பீடுகள் வெளியிடப்படுவதில் உள்ள காலதாமதம் குறைக்கப்பட்டுள்ளன.
* அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களுக்கான தரவு மேலாண்மை நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் முக்கிய மற்றும் பெரிய அளவிலான குறியீடுகளின் தரவுகளையும், அமைச்சகத்தின் முக்கிய தரவுகள் பட்டியலையும் வழங்குகிறது.
* மாநில புள்ளியியல் அமைப்பின் புள்ளியியல் திறன் மற்றும் செயல்பாடுகளை வலுப்படுத்த தற்போது நடைமுறையில் உள்ள மத்திய துறை துணைத் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மானிய உதவி வழங்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை மாநிலங்களவையில் நேற்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை இணையமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் தெரிவித்தார்.
++