வள்ளலார் அவர்கள் 50 ஆண்டுகள் மூன்று மாதங்களில்5818 பாடல்கள் பாடியுள்ளார். மூன்று நூல்களை பதிப்பித்து உள்ளார்.. உரைநடை நூல்கள் அதிகம் எழுதியுள்ளார்.
வள்ளலார் துறவி மட்டுமின்றி சமயம் சார்ந்தவர். சமயத்திற்கு புறம்பாக ஒருபோதும் சேர்ந்தவர் இல்லை. அப்போதைய சமயங்கள் விழாக்கள் கொண்டாடுவதில் தான் மக்கள் கவனம் செலுத்தினார். ஆனால் மக்கள் பிரச்சினைகள் பேசும் இடமாக அவைகள் விளங்கவில்லை.
வள்ளலார் வாழ்ந்த காலத்தில் கடும் பஞ்சம் அவற்றை போக்க வேண்டும் என்கிற ஆர்வம் அவரது எண்ணத்தில் தான் தோன்றியது அப்போது மக்களின் பசிப்பிணி போக்க வழிமுறைகளை சமயங்கள் தேடவில்லை. ஆனால் வள்ளலார் மக்களின் பசிப்பிணியை
போக்கிட வழி தேடினார்.
எவ்விடத்தும் இவ்வு இருக்கும் இளங்கும் சிவம் என்று பாடிய வள்ளலார் வடலூரில் எண் கோண வடிவில் சத்ய ஞான சபையை நிறுவி அங்கு ஜோதி தரிசன நிகழ்ச்சியை ஏற்படுத்தினார்.
ஆன்மீகவாதிகள் பெரும்பாலோர் காவி உடை அணியும் வேலையில் வள்ளலார் மட்டும் வெள்ளாடை அணிந்தார். தூய்மையை குறிப்பது வெள்ளாடை. வெள்ளை நிறம் அன்புக்கும் நட்புக்கும் சமாதானத்திற்கும் பயன்படுத்துவ
தாலே வள்ளலார் வெள்ளை உடையை தேர்வு செய்தார்.
வடலூரில் அவர் அன்று ஏற்றி வைத்த அணையாத அடுப்பு இன்றும் பசிப்பினியை போக்கி வருகிறது என்பது மிகப் பெரிய சாதனை. இப்போது தமிழக அரசின் சார்பிலும் வள்ளலார் பிறந்தவ விழா கொண்டாடப்படுகிறது. . வடலூரில் பல கோடி செலவில் வள்ளலார் மையம் நினைவகம் அமைக்க இருக்கிறார்கள். . இவ் உயிரையும் தம்முயிர் போல் என்ன வேண்டும் என வாழ்ந்த வள்ளலார் நமக்கு கிடைத்த பொக்கிஷம்.
அவரின் சில பொன்மொழிகள்.
சமரச சன்மார்க்கம் மட்டுமே வாழ்வில் உயர வழி வகுக்கும்.
ஜோதி வழிபாடு சிறந்தது.
உயிர் போகும்போது எதையும் கொண்டு செல்ல போவதுமில்லை ஆகவே அதிகமான சிக்கனம் அவசியமில்லை. பசிப்பினியை அகற்றிட அனைவரும் அன்னதானம் செய்ய வேண்டும். .
நல்ல மனங்களை ஏமாற்றக்கூடாது. இறைவன் ஜோதி வடிவானவன் அவனை வணங்கி முக்தி பெறலாம்.
ந. சண்முகம்
117 பைபாஸ் ரோடு திருவண்ணாமலை.