tamilnadu epaper

அதிகமாக வரி விதிக்கும் இந்தியா : டிரம்ப் பேச்சு

அதிகமாக  வரி விதிக்கும் இந்தியா : டிரம்ப் பேச்சு

வாஷிங்டன், பிப். 19 -

இந்தியாவில் வாக்க ளிப்போரின் சதவிகிதத்தை அதிகரிக்க, அமெரிக்கா 180 கோடி ரூபாயை வழங்கி வந்த நிலையில், எலான் மஸ்க் தலைமையிலான, அமெரிக்காவின் செயல்திறன் துறை (DOGE), அந்த நிதியை ரத்து செய்தது. இதனை ‘மனித குல வர லாற்றில் மிகப்பெரிய மோசடி’ என பிரதமர் மோடி யின் பொருளாதார ஆலோச னைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் விமர்சித்தி ருந்தார். இந்நிலையில் தான், மக்களிடம் அதிகமாக வரி விதித்து, அதிக பணத்தை வைத்துள்ள இந்தியாவுக்கு நாம் (அமெரிக்கா) ஏன் 180 கோடி ரூபாய் (21 மில்லியன் டாலர்களை) கொடுக்க வேண்டும்? என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கேட்டுள்ளார்.