" />
" வீட்டில் எப்போதும் கணவன் மனைவி சண்டை . அம்மா -அப்பா சண்டையை பார்த்து பார்த்து சலிச்சு போச்சு மகன் மதனுக்கு .
பள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரி சென்று விட்டான் மதன் . இருந்தும் அவன் மனதில் ஒரு வேதனை அப்பா அம்மா சண்டை இல்லாம சந்தோஷமா வாழனும்ங்கிறது தான் .
அம்மா சுதாவின் சந்தேக புத்தி அப்பா மாதவனுக்கு பிடிக்காது அப்பாவின் அதிகார புத்தி அம்மாவுக்கு பிடிக்காது .
எதாவது ஒரு அதிர்ச்சி கொடுத்து இரண்டு பேரையும் சேர்த்து மனம் விட்டு பேச வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தான் மதன் .
தன் கல்லூரியில் தன் வகுப்பில் படிக்கும் ராகவியை நாடினான் , அவளுக்கு காதல் என்றால் மனம் பத்தி எரியும் . வீட்டின் விபரத்தை கூறி உதவி கேட்டான் .
நான் எப்படி உதவி செய்ய முடியும் என்றாள் ராகவி, நீ நடித்தால் போதும் மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றான் மதன் .
உனக்கு காதல் நெருப்பு அந்த நெருப்பு தான் இப்ப எனக்கு வேண்டும் என்றான் மதன் . எப்படி என்றாள் ராகவி . இப்போதைக்கு நீ என் காதலி என்றான் மதன் .
தன் வீட்டில் நேரம் கிடைத்த போது தன் காதலை பத்தி சொன்னான் காதலியை வர்ணித்தான் மதன் . அவ்வளவு தான் அப்பா அம்மா குதித்து வீடு ரணமாகி அமைதியானது .
தினமும் மாதவனும் - சுதாவும் தனிமையில் மதன் காதல் விவகாரம் பத்தி மணிக்காக பேசி நாட்கணக்கா மாதக் கணக்கா இது தொடர்ந்தது .
மதனும் கோபத்தைக் கூட்ட ராகவியை வீட்டுக்கு அடிக்கடி அழைத்து வருவான்.
மாதவனும் - சுதாவும் தன் தவறுகளை உணர்ந்து மனம் விட்டு பேசி பிரியா தம்பதியராய் மதனின் எதிர்காலத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல முடிவெடுத்தனர் .
" ஒரு நாள் அப்பா அம்மா வெளியில் சாப்பிட கூப்பிட மதன் சரி என்று சொல்லி இது தான் உண்மையை உடைக்க சரியான தருணம் என்று நினைத்து ராகவியை அழைத்து வந்தான்.
ராகவியை பார்த்ததும் மாதவன் - சுமதி முகம் மாறியது . அப்போது ராகவி சொன்னாள் மதன் உண்மையில் உங்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர் ,அவன் திட்டத்தினால் தான் நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து
கொண்டீர்கள் என்றாள் .
அதிர்ச்சியாய் ராகவியை இருவரும் பார்க்க மதன் காதலிப்பவன் அல்ல நல்ல எதிர்கால தேடலின் உழைப்பாளி . நான் காதலை வெறுக்கும் லட்சியவாதி என்றாள் .
எங்கள் நாடக காதல் உங்கள் இருவரையும் ஒன்றாக சேர்த்து விட்டது நன்றி என்றாள் .
மதனை விட ராகவியை மகளாக அனணத்து அகம் மகிழ்ந்தனர் மாதவன் - சுமதி தம்பதியர் ..."
- சீர்காழி. ஆர். சீதாராமன் .
9842371679 .