tamilnadu epaper

அந்த மனசுதான் சார்...

அந்த மனசுதான் சார்...

வீதிக்குள் புகுந்தது
வெள்ளம்! 
தூரத்தில்
தத்தளிக்கும் நாய்க்குட்டி! 
மீட்புப்பணிக்கு
என்னைப்
போகச்சொல்லி
அழுதபடி
என்
செல்வ மகள்! 
கையில்
தயார்நிலையில்
வைத்திருக்கும்
காகிதக் கப்பலை
நீட்டியபடி...! 

    பிரபாகர்சுப்பையா, வில்லாபுரம், மதுரை-12.