Breaking News:
tamilnadu epaper

அனல்காற்று எதிரொலி: தொழிலாளர்களின் பணிநேரம் மாற்றி அமைக்க அறிவுரை

அனல்காற்று எதிரொலி: தொழிலாளர்களின்  பணிநேரம் மாற்றி அமைக்க அறிவுரை


புதுடெல்லி, ஏப். 24–

பல்வேறு துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் அதிக அனல்காற்றின் தாக்கத்தை குறைக்க பயனுள்ள நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

 அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், நிர்வாகிகளுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அதிக வெப்ப அனல்காற்றின் மோசமான விளைவுகளைத் தணிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிமையாளர்கள், கட்டுமான நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

பணி நேரத்தை மாற்றியமைத்தல், போதுமான குடிநீர் வசதிகளை உறுதி செய்தல், பணியிடங்கள், ஓய்வு எடுத்துக் கொள்ளும் பகுதிகளில் காற்றோட்டம் மற்றும் குளிரூட்டல், தொழிலாளர்களுக்கு வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஐஸ் கட்டிகள் மற்றும் வெப்ப நோய் தடுப்பு பொருட்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யுமாறு அக்கடிதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.