அப்பாவின் ஆசை (நா. நாகராஜன் )
மகள் சித்ரா பி எஸ் சி முடித்ததும், அவளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து இருந்தார் ராகவன்.
இரண்டு வருடம் இடை வெளியில் பிறந்த சங்கர் பள்ளி படிப்பு தான் என்றாலும், அவனை பொறியியல் படிக்க வைக்க முடிவு செய்தார்.
மனைவி கவுசல்யா வால் எதுவும் சொல்ல முடிய வில்லை. அவளுக்கும் அவர் பணி ஓய்வுக்கு முன் மகள் கல்யாணம் முடிந்தால் நல்லது என்றே தோன்றியது. அவள் அண்ணன் மகன் வாசு வெளிநாட்டு வங்கியில் பணி புரிந்தாலும், இப்போ உள்ள தலைமுறை, சொந்த உறவில் திருமணம் செய்தால் குறைபாடு உள்ள குழந்தை பிறக்கும் என்று நம்புவதால், அவளால் பேச முடியவில்லை.
மகள் சித்ராவிற்கும் மேற்கொண்டு படிக்க ஆசை. அப்பாவின் கோபத்தின் முன் நிற்க யாருக்கும் துணிவு இல்லை.
தெருவில் அவள் வயது பெண்கள் எல்லாம் மேல் படிப்பு பற்றி பேச, இவளுக்கு வீட்டில் கல்யாண பேச்சு எடுத்தது எப்படியோ கசிந்து விட்டது.
"உங்க காலத்தில் ஒரு டிகிறியே பெருசு. எங்க காலத்தில் பெண்கள் வயசுக்கு வந்ததும், பள்ளி படிப்பை கூட பாதியில் நிறுத்தி விடுவார்கள் "அம்மாவின் பேச்சு அவளை ஆறுதல் படுத்த வில்லை.
"ஏன் சித்ரா டென்ஷன் ஆகரே, எனக்கு எல்லாம் இப்படி ஒரு சான்ஸ் கிடைச்சா அப்பாவுக்கு கோவில் கட்டி கும்பிடுவேன் "தோழி கல்பனா அம்மா காதுபட பேசினாள்.
கோவில் போகும்போது கூட முருகரிடம் அதையே வேண்டினாள். தேவர் படம் மாதிரி ஏதாவது மாற்றம் திடிர்னு நிகழா தா என்று எதிர் பார்த்தாள்.
அவள் எதிர்பார்த்த படி மத்திய அரசு ஊழியர் பணி ஓய்வு வயதை இரண்டு வருடம் உயர்த்தி, அரசு உத்தரவு பிறப்பித்தது.
அவளுக்கு ரொம்ப சந்தோசம்.
"என்ன சித்ரா, மேலே படிக்க போறியா?"
"படிப்போ வேலையோ இன்னும் இரண்டு வருஷம் அப்பா கல்யாண நச்சரிப்பு இல்லை. தம்பியும் பள்ளி படிப்பை முடிக்கும் நிலைக்கு வந்து விடுவான்.ஒரு நகைச்சுவை கதையில் சொன்ன மாதிரி இரண்டு வருட இடைவெளி யில் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம் ".
அம்மாவை தம்பியை அன்புடன் பார்த்தாள் சித்ரா.
முதலில் பெண் பிறந்தால் தப்பு இல்லை, கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் சரி. சிரிப்பு வந்தது அவளுக்கு. எங்கேயோ ஆற்றின் கரையில் இருக்கும் முருகருக்கு அவள் ஆசை, கனவு, லட்சியம் தெரிந்து இருக்கு. வீட்டில் இருக்கும் அப்பாவை விட.
"தேங்க் யூ கடவுளே "என்றாள் உள்ளுக்குள் சிரித்த படி.
இனி பெண்கள் காலம். இளவரசிகள் காலம் ஆரம்பம்.
(முற்றும் )
-நா.நாகராஜன் ஊரப்பாக்கம்