tamilnadu epaper

அம்மா.. அம்மா..

அம்மா.. அம்மா..


அந்த அம்மா.. இந்த அம்மா.. அப்படி அம்மா.. இப்படி அம்மா.. யார் யாரோ வந்தார்கள் சொன்னார்கள்.. சொல்லிவிட்டுப் போகட்டும்.!


எந்த அம்மா.. என்றாலும் கவலையில்லை அம்மா.. இந்த அம்மா தமிழ் நிலத்தை துணிச்சலுடன் ஆண்ட அம்மா! 


எந்தக் கொம்பனுக்கும் அஞ்சாத அம்மா.. எம்.ஜி. ஆரு கண்டெடுத்த இயக்கம் தான் அம்மா.!  


இருந்தவரை.. வாலாட்ட நினைத்தவரை எல்லாம் இடுப்பொடிய தேருதலில் அடி கொடுத்த அமர வைத்த அம்மா..! 


அம்மா ன்னா.. சும்மா வா? வடக்கு திசை தெற்கு நோக்கி வணங்க வைத்த அம்மா..


சின்னம்மா.. பெரியம்மா.. அத்தனை அம்மாக்கும்.. கன்னக்கோல் சூடு வைத்து.. கதற வைத்த அம்மா...!


சூப்பர் ஸ்டார்.. கீப்பர் ஸ்டார் எல்லாம் சுண்டைக்காயாய் சுருட்டி.. சுழலவிட்ட அம்மா..


தரைப்பாலமாய் நினைத்து கடந்தவர்கள் எத்தனை பேர்? தரையோடு தரையாகக் கிடந்தவர்கள் எத்தனைப் பேர்? சிறை வைத்துப் பார்த்தவர்கள் எத்தனைப்பேர.? சபை நடுவே துகிலுரித்த துச்சாதனர் எத்தனை பேர்?


மிச்சமே இல்லாமல்.. அச்சமே இல்லாமல்.. அத்தனைப் பேர்களையும் அதிர வைத்த அம்மா.!


ஆணாதிக்க அரசியலில் சுற்றி சுழன்றடித்த சுனாமி நீயம்மா.! முறத்தாலே புலி விரட்டிய.. பெண்ணை யாம் பார்த்ததில்லை..

அறத்தாலே அநீதிகளை அலற வைத்தாய்ப் பார்த்தோமே.!


உன்னைப்போல் ஒரு தலைவி.. உதித்ததனால் தெற்கு த் திசை.. மண்ணகத்தே மணிமகுடம் உனக்குத்தான் தந்ததம்மா.!


பச்சைவண்ண சேலை கண்டால் பதைபதைப்பார் பவ்வியமாய் பதுங்கி நிற்பார்.. ஆனால் நீயோ இச்சகத்தில் ஏழையர்கள் நெஞ்சத்தில் வீரத் தலைவியாய் வீற்றிருப்பாய் அம்மா.!


இன்றுதான் பிறந்தாயா? இல்லையில்லை..எங்கள் நெஞ்சில் என்றுமே இருந்து.. ஔிவிளக்காய் ஔிர்ந்தவளே.. எங்கள் அம்மா.!


-வே.கல்யாணகுமார்.

பெங்களூரூ.