பாலஸ்தீனர்களுக்கு தற்காலிக தங்குமிடம் வழங்க தயாராக இருப்பதாக இந்தோனேசியா ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ தெரிவித்துள்ளார். காசாவில் உள்ள பாலஸ்தீனர்களை துரத்தி விட்டு அக்கடற்கரையில் ஆடம்பர கேளிக்கை விடுதிகள் கட்டப் போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இஸ்ரேல் ஜனாதிபதி நேதன்யாகுவும் டிரம்ப் உத்தரவை அமல்படுத்த தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளார். இந்நிலையில் சுபியாண்டோவின் அறிவிப்பு கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.