tamilnadu epaper

அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கு இலவச நீர் மோர்

அரசு அலுவலகங்களில்  பொதுமக்களுக்கு இலவச நீர் மோர்

திருப்பூர், ஏப்.2 –

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பொது மக்களின் தாகத்தை தணிக்கவும், நீர்ச்சத்து குறையாமல் இருக்கவும் திருப்பூர் மாவட்டத்தில் 20 அரசு அலுவல கங்களில் இலவச நீர் மோர் வழங்கும் திட்டம் புதனன்று தொடங்கப்பட்டது. இதன் தொடக்க நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ் துராஜ், இலவச நீர் மோர் வழங்கும் சேவையை துவக்கி வைத்தார். கோடை காலத்தில் பொதுமக்கள் உடலில் நீர்ச் சத்து குறைந்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், இதனை தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல் கின்றனர். அவர்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் பயன ளிக்கும் வகையில் அலுவலக நுழைவு வாயிலில் இலவச மாக நீர் மோர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் உட்பட மொத்தம் 20 அரசு அலுவலகங்களில் இன்று முதல் இந்த இலவச நீர் மோர் சேவை பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.