நியூ சவுத் வேல்ஸ்: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பரவும் நிமோனியா வகை நோயால் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் புதியதாக 5 பேருக்கு லெகியோனையர்ஸ் (Legionnaires) எனும் நோயின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மேலும், அவர்கள் 5 பேரும் சிட்னியின் மத்திய வர்த்தக மாவட்டத்திற்கு சென்று திரும்பியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவக்கும் கடந்த மார்ச் 30 முதல் ஏப்ரல் 4ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இந்த நோயிக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. நோய் தொற்று பரவியதற்கான காரணம் குறித்து கண்டறியும் முயற்சியில் அந்நாட்டு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.