கள்ளக்குறிச்சி, ஏப்19. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்கிறிஸ்துவ தேவாலயங்களில் புனித வெள்ளி ஒட்டி சிலுவைப்பாதை சிறப்பு வழிபாடு நடைபெற்றது கிறிஸ்தவர்களின் 48 நாட்கள் தவக்காலம் தற்பொழுது நடைபெற்று வருகிறது கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை புனித வரமாக கடைபிடிக்கப்பட்டு குருத்தோலை ஞாயிறு உடன் தொடங்கியது இதனை தொடர்ந்து புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை திருப்பலி கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுகின்றன உளுந்தூர்பேட்டை அருகே சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள அற்புத குழந்தை இயேசு ஆலயம் மற்றும் மாதம்பட்டு ஆணைவாரி இருந்தை உள்ளிட்ட அனைத்து கிறிஸ்துவ தேவ ஆலயங்களிலும் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் 14 நிலைபாடுகளை நினைவு கூறும் வகையில் பாடல்களை பாடி மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டனர் சேந்தமங்கலம் கிராமத்தில் பங்குத்தந்தை வின்சென்ட் தலைமையில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் ஜெபமாலை பாடல்களை பாடியபடி கிராமத்தின் மாதா கோவில் தெரு மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக தவப்பயணம் சென்று வழிபட்டனர்.