tamilnadu epaper

12 ஆண்டுகளாக தொடரும் பண்பாட்டு நிகழ்வு

12 ஆண்டுகளாக தொடரும் பண்பாட்டு நிகழ்வு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க திருச்சி மாவட்டக் குழு உறுப்பினர் சரவணன் - கோபிகா தம்பதியினரின் இரட்டை குழந்தைகளின் 2 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, வியாழனன்று மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவிடத்திற்குச் சென்று அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். பட்டுக்கோட்டை கிளைத் தலைவர் முருக சரவணன், கிளை துணைத் தலைவர் கந்தசாமி, பொருளாளர் பக்கிரிசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் திருச்சி மாவட்டக் குழு உறுப்பினர்கள் மாறன், ரமேஷ், கைலாசபுரம் கிளைச் செயலாளர் காளிராஜ் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டு குழந்தைகளை வாழ்த்தினர். திருச்சி மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க கைலாசபுரம் கிளை சார்பில், கடந்த 12 வருடங்களாக உறுப்பினர்களின் பிறந்தநாள், திருமண நாள் விழாக்களை ஒவ்வொரு தியாகிகளின் நினைவிடத்திற்குச் சென்று கொண்டாடும் பண்பாட்டு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.