tamilnadu epaper

தென்னம்பட்டு அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ வருந்தீஸ்வரர் மீது சூரிய தரிசனம்:

தென்னம்பட்டு அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ வருந்தீஸ்வரர் மீது சூரிய தரிசனம்:


தங்க நிற மேனியைக் கண்டு பக்தர்கள் பரவசம்.


செய்யாறு ஏப். 19,


திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் வட்டம் ,தென்னம்பட்டு கிராமத்தில் அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வருந்தீஸ்வரர் கோயில் எழுந்தருளி உள்ளது.


இக்கோயிலில் நேற்று அதிசய நிகழ்வான காலை சுமார் 6:30 மணிக்கு சூரிய கதிர்கள் மூலவர் மீது பட்டு தங்க நிற மேனியாய் ஜொலித்தது .இந்த சூரிய தரிசனம் ஆண்டுக்கு ஓரிரு முறை அரிய நிகழ்வாக இருப்பதாக கூறப்படுகிறது.


பக்தர்களும் ,பொதுமக்களும் தங்க மேனியான அருள்மிகு வருந்தீஸ்வரரை கண்டு வணங்கி மகிழ்ந்தனர்.