tamilnadu epaper

அருணாச்சலே

அருணாச்சலே

பகவான் ரமணர் அண்ணாமலையை அடைந்து தமது தந்தையாகிய அருணாச்சலே

ஸ்வரரிடம் தம்மை முழுதும் ஒப்படைத்து, " உன்னிஷ்டம்........

என்னிஷ்டம் " எனவும் ...................... " உன் எண்ணம் எதுவோ அது செய்வாய்"..... என்றும் சரணாகதியின் உருவமாகவே தமது மீதிநாட்களில் ....... அண்ணாமலையில் ........உலவினார்.

 

பின்னாட்களில் பகவானிடம் ஒரு அன்பர், "பகவானே! ஸ்கந்தாஸ்ரமத்தில் இருந்து தாங்கள் கீழே ரமணாஸ்ரமதிற்கு வந்தததற்கு எது காரணம்? " என வினவ அதற்கு பகவான் 

" மதுரையிலிருந்து எந்த சக்தி அண்ணாமலைக்கு இழுத்ததோ ......அதுதான் ஓய்! இங்கும் இழுத்துவந்தது!" என்றார், எனில் அவரது சரணாகதியின் அசலத்தன்மை................... ...

அருணாச்சலத்தில் வாழ்ந்த 54 ஆண்டுகளுக்கும் மேலாக அவருள் நிலைபெற்று,.....அதுவாகவே இருந்தார் ..... இது இன்னும் ஒரு நிகழ்வால் நனி விளங்கும்.

 

அது 1946 ம் ஆண்டாக இருக்கலாம். பகவானது ஜெயந்தி கொண்டாட்டத்திற்காக மக்கள் கூட்டம் 

நிரம்பியிருந்தது. ஏற்கனவே .......சுமார் 400 பக்தர்களுக்கு மேலவும் இருக்கலாம். அன்று இரவு 12.00 மணியாகியும் ஆஸ்ரமத்தின் சர்வாதிகாரியாகிய சுவாமி நிரஞ்ஜனானந்தர் தூங்காமல் ( அதிகாலை 3.00 மணிக்கே எழுவதால் இரவு 8.30 க்கு தூங்கிவிடுவர்) அறையின் நடுவே குறுக்கும், நெடுக்குமாக கையை பிசைந்து நடந்துகொண்டு இருந்தார் . இதனை பகவானது அறையிலிருந்து பார்த்த அணுக்கத் தொண்டர், பகவானின் அனுமதி பெற்று ஆபீஸ் அறைக்கு சென்று சர்வாதிகாரியிடம் விசாரிக்க , " நாளை ஜெயந்தி விழா! இங்கு ஒரு குண்டுமணி கூட அரிசி இல்லை! பெட்டிகளில் கொஞ்சம் கூட பருப்பும் இல்லை. இங்கோ....400 பேருக்கு மேலே உள்ளனர். நாளைக்கு இன்னும் நிறையவே மக்கள் வருவர். உணவுக்கு என்ன பண்ணுவது என்று தெரியாத கவலையினால் தூக்கம் வரவில்லை " என்று வருந்தி கூற ............ 

 

இதைக்கேட்டதும் அந்த அணுக்கத் தொண்டருக்கும் கவலை தொற்றிக்கொள்ள பகவானிடம் வந்து....." பகவான்! சின்னஸ்வாமி கவலையில் உள்ளார் ......நாளை ஜெயந்திக்கு சமைப்பதற்கு அரிசியோ!...பருப்போ .......எதுவும் இல்லையாம்!" என்று கவலையுடன் தெரிவித்தார் . பகவானோ புன்னகையுடன் "ஓ !..... அவன் பொறுப்பை ஏற்றுக் கொள்வதால் துன்புறுகின்றானா? ஏன் அருணாச்சலத்திடம் பொறுப்பினை ஒப்படைக்கக்கூடாது ..... .....மனதை திருப்பி அருணாச்சலத்திடம் இருத்தினாலென்ன?.......மனதை அருணாச்சலத்தில் திருப்பி இருத்தினால் ......பொறுப்பு அவருடையதாகுமே!"......என்று அருளினார். அணுக்கத் தொண்டரும் சின்ன ஸ்வாமியிடம் சென்று பகவான் கூறியதை கூறினார்.

சின்னஸ்வாமியும் பகவானிடம் வந்து நமஸ்கரித்து விட்டு ... . ........ அவ்வாறே தாம் இருப்பதாகக் கூறி....வெளியில் வந்து......

அண்ணாமலைக்கும் நமஸ்காரம் செய்துவிட்டுச் சென்றார்.

 

உண்மையில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் அது நடந்தது. ஒரு மாட்டு வண்டி நிரம்ப அரிசி மூட்டைகள் , பருப்பு மூட்டைகள், காய்கறி சாமான்கள் வந்திறங்கின. எப்படியெனில் அடுத்த பத்து கி.மீ. உள்ள ஒரு இடத்தில பகவானது

 செல்வந்தரான ஒரு பக்தரின் கனவினில் பகவான் தோன்றி, ஒரு லிஸ்ட் கொடுத்ததாகவும் ......அதில் அரிசி இவ்வளவு மூட்டை .....பருப்பு இவ்வளவு ....

காய்கறிகள் அளவு........... என ஜெயந்திக்கு தேவையான எல்லாம் அதில் குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும்,...... அவர் உடனே எழுந்து அவருடைய கடையிலிருந்த பொருட்களை வண்டியில் கட்டி அதிகாலை 3.00 மணிக்கு ஆஷ்ரமத்தில் சேர்க்க கொண்டு வந்ததாகவும் கூறினார். 

 

வேறுயென்ன !.....

சின்னஸ்வாமி பகவானிடம் ஓடிவந்து, "பகவானே! ஜெயந்திக்கு தேவையான சமையல் பொருட்கள் எல்லாம் வந்துவிட்டன." என்று சரணாகதியின் மகத்துவத்தை உணர்ந்து கைகூப்பி வணங்கினார். இப்போது அவ்வளவு பேருக்கும் சமைக்க ஆளில்லை. படுத்திருந்த எல்லோரும் எழுப்பப்பட்டு .....பகவானும் அவர்களுடன் சமையலில்  

பங்குகொண்டு ........அந்த வருட ஜெயந்தி மிகச்சிறப்பாக நடைபெற்றது.

 

 " நாம இருக்கற படி இருந்தா ........

 நடக்க வேண்டியது தானாகவே நடக்கும்."       

                                                         -நமோ ரமணா