கல்லும் கல்லும் தட்டிப்பார்த்து தாளம் என்று பெயர் வைத்தான்...
கல்லையும் கல்லையும் உரசி பார்த்து அனல் என்று ஆர்வம் கொண்டான்...
பனை மரத்து பட்டையிலே ஆணியால் எழுதிக்கொண்டாடினான்...
கருவியே இல்லாத காலத்தில் கூட கல்லணையை கட்டி முடித்தான்....
பூமி பந்தில் வாழும் அனைத்துக்கும் பொதுமறையை தந்து வைத்தான்...
கருவறை சிசுவை கூட கல்வெட்டில் செதுக்கி வைத்தான்...
அறிவு என்ற சொல்லை அருவியாய் அள்ளி பருக உலகிற்கு கொடுத்தான்...
தாய் மொழி தமிழோடு தன் பெயரையும் தழுவிக்கொண்டான்...
இத்தனையும் இருந்தும் எப்படிடா வீழ்ந்து போனோம்...சூழ்ச்சியால் நாம மாண்டு போனோம்...!!
பொன்.கருணா
நவி மும்பை