tamilnadu epaper

அறிவோம் தினம் ஒரு புலவர்:

அறிவோம் தினம் ஒரு புலவர்:

 

 

பெயர்:கழார்க் கீரன் எயிற்றியனார் 

 

1 சங்ககாலப் புலவர்களில் ஒருவர். 

 

2.அவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 330 எண் கொண்ட பாடல்.

 

3.கழார் என்னும் ஊரில் வாழ்ந்த புலவர் இவர்.

கழாரில் வாழ்ந்த மற்றொரு புலவர் கழார்க் கீரன் எயிற்றியார்.

 

4.பாலை நிலப் பெண்ணை எயிற்றி என்பர். பாலைநில ஆண் எயினன். அம்பு எய்வதில் வல்லவன் எயினன். (எய் + இன் + அன்) எயினனுக்குப் பெண்பால் எயிற்றி. 

 

5.காவிரிக்கரை ஊரான கழாரில் வாழ்ந்த புலவர் கீரன். இவர் எயினப் பெண்ணை மணந்துகொஒண்டு வாழ்ந்ததால் கீரன் எயிற்றியனார் என வழங்கப்பட்டார்.