அலங்காநல்லூர், மே.12.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தர்மசாஸ்தா ஆலயத்தில் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு குரு பெயர்ச்சியாவதை முன்னிட்டு நேற்று காலை காலை 11 மணி முதல் 1:30 வரை சிறப்பாக நடந்தது. அங்கு அமைந்துள்ள கல்யாண நவக்கிரக ஸ்ரீ குரு பகவானுக்கும், ஸ்ரீ அஷ்டமா சித்தி தட்சிணாமூர்த்திக்கும் பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பால், சந்தனம், விபூதி, தயிர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரங்கள், தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஏ.எல். சீனிவாசன் மற்றும் ஐயப்ப , முருக பக்தர்கள் செய்திருந்தனர்.