tamilnadu epaper

அவசரகதியில் கான்கிரீட் சாலை எதிர்ப்பு தெரிவித்து மக்கள் முற்றுகை

அவசரகதியில் கான்கிரீட் சாலை  எதிர்ப்பு தெரிவித்து மக்கள் முற்றுகை

திருப்பூர், ஏப்.2–

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட முருகம்பாளையம் பகு தியில் அவசரகதியில் கான்கிரீட் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் புதனன்று மாநகராட்சி 4 ஆவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாநகராட்சி, 41 ஆவது வார்டுக்குட்பட்ட அண்ணா நகர், முருகம்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளிட்ட வீதிகளில் பழுதடைந்த மழைநீர் வடி காலை அகற்றி புதிய மழைநீர் வடிகால் மற்றும் கான்கிரீட் சாலை அமைப்பதற்கு ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் கடந்த மாதம் 13 ஆம் தேதி பணி துவக்க விழா நடைபெற்றது. இந்நிலை யில், 25 நாட்கள் கடந்த நிலையில், இப்பகுதியில் கான்கிரீட் சாலை அமைப்பதற்காக அவசரகதியில் குழிகள் தோண்டப் பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், சாலையின் நடுவே இருக்கும் மின் கம்பத்தை மாற்றி அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், சாக் கடை வசதியும் ஏற்படுத்தப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சாக்கடை வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், உடைந்து விழும் நிலையில் உள்ள மின் கம் பத்தை மாற்றி அமைத்த பிறகே கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், முருகம்பாளையத்தில் உள்ள திருப்பூர் மாநகராட்சி 4 ஆவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து அதிகாரி கள் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை சமாதானப் படுத்தினர்.