இரண்டும்
இரண்டு
கண்கள்
அல்ல
இரண்டு
GUN கள்
தோட்டாக்களும்
தோற்றுப் போகும்
எனது
மனதை
துளைத்தெடுக்கும்
உனது
பார்வையில்
உன்
கண்களால்
எனை
கைது செய்
எமக்கு
ஆயுள்
கைதியாகும்
பாக்கியத்தை
கொடு
அட...
உன்
இமைகள்
இமைக்கையில்
கறுப்பு
வெள்ளையில்
இரு
வண்ணத்துப் பூச்சி...
நீ
என்னை
இப்படியே
பார்த்துக்
கொண்டே இரு...
உன்
நீலக் கண்களால்
என்
ஆயுளின்
நீளம்
நிச்சயம்
இரட்டிப்பாகும்...
ஆறுமுகம் நாகப்பன்