சமயபுரம் மாரியம்மன்*
மாரியம்மன் சுகாசினியாகக் காட்சி தருகிறாள். தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில் காட்சி தருகிறது. நெற்றி நிறைய திருநீறு, குங்குமம் அணிந்துள்ளாள்.
வசுதேவர்- தேவகி தம்பதியின் 8வது குழந்தையான கிருஷ்ணர், நந்தகோபன்- யசோதையின் பெண் குழந்தை கம்சனது சிறைச்சாலைக்கு இடம் மாற்றப்படுகின்றனர். அந்தப் பெண் குழந்தை தான் இந்த மாரியம்மன் எனத் ஸ்தல வரலாறு கூறுகிறது
சித்திரை மாதத்தின் கத்தரி வெயிலில் அம்மை நோய் மக்களுக்கு ஏற்படும். அந்த வெப்பத்தைத் தான் ஏற்றுக் கொண்டு, மக்களை குளிர வைக்கும் தாயின் உடல் வெப்பத்தை தணிக்கவே, பக்தர்கள் பூமாரி பொழிந்து குளிரச் செய்கிறார்கள்.
சமயபுரத்தாள் விக்கிரகம் மூலிகைகளால் ஆனதால், இதற்கு அபிஷேகம் கிடையாது. உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம்.
கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன.
அம்பாளின் கருவறையைச் சுற்றி எப்போதும் ஈரத் தன்மையுடன் வைத்திருக்கிறார்கள்...அன்னை குளிர்ச்சியாக இருப்பதற்காக!
கொள்ளிடம் ஆறு தான் அண்ணன் ஸ்ரீரங்கநாதரையும், தங்கை சமயபுரத்தாளையும் பிரிக்கிறது. தைப்பூசத்தின் போது அம்மன், கொள்ளிடக் கரையின் தென் பகுதியில் நீராட வருவாள்.
அன்று ஸ்ரீரங்கம் பெருமாள் ஆலயத்திலிருந்து பட்டுப் புடவைகள், மாலைகள், தளிகைகள் ‘மகமாயி’க்கு சீராக அனுப்பி வைக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இதை தீர்த்தவாரி விழா என்பர்.
தமிழகத்தில் பழநிக்கு அடுத்து இரண்டாவதாக அதிக காணிக்கை பெறும் தலம் சமயபுரம்.
"சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள்"
தேவியின் திருத்தலங்கள் தொடரும்....
கீதா ராஜா சென்னை