tamilnadu epaper

ஆடி மாதம் அம்மன் மாதம்*

ஆடி மாதம் அம்மன் மாதம்*

மூன்று சக்தி கோயில்கள்(சென்னை)

 

*இச்சா சக்தி*

 

விருப்பங்களை நிறைவேற்றுபவள், சௌந்தர்யத்தின் இருப்பிடம், லாவண்யமானவள், மனதை சுண்டி இழுத்து அதில் எண்ணற்ற கனவுகளை விதைப்பவள், அமைதிக்கான ஆதாரம், நமக்கு சௌபாக்யங்களை தருபவள்.

 

 *திருவுடையம்மன் கோயில், மேலூர்(மீஞ்சூர்)*

 

*ஞான சக்தி*

 

அறிவு தருபவள், சகல வித்தைகளிலும் நமக்கு வெற்றி தருபவள், நமது புத்தியில் உறைபவள், கவிதையாக, காவியமாக, சங்கீதமாக அருள்பாலிப்பவள்.

 

 *வடிவுடையம்மன் கோயில், திருவொற்றியூர்*

 

*கிரியா சக்தி*

 

வாழ்க்கை வளம்பெற தூண்டிவிடுபவள், துவக்கிவைப்பவள், ஒளிமயமான வாழ்க்கையை நமக்கு அமைத்துக் கொடுப்பவள், செல்வம், செல்வாக்கு தந்து சுகமான வாழ்வருளும் சர்வேஸ்வரி.

   

 *கொடியிடையம்மன் கோயில், திருமுல்லைவாயில்*

   

இந்த மூன்று கோயில்களும் ஒரே நாளில் தரிசனம் செய்வது சிறப்பு. 

 

கீதா ராஜா சென்னை