நெல்லுக்கடை மாரியம்மன்*
நாகப்பட்டினம் நகரத்தின் மத்தியில் அமைந்திருக்கிறது நெல்லுக்கடை மாரியம்மன் கோயில். உலகப்புகழ் பெற்ற இந்தக் கோயிலில் அருள்மிகு நெல்லுக்கடை மாரியம்மன் அருள்பாலிக்கிறார்.
இக்கோயிலில் உள்ள மூலவர் மாரியம்மன் நான்கு கரங்களைக் கொண்டுள்ளார். சிறந்த பிரார்த்தனைத் தலம்.
ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதத்தில் இங்கு நடைபெறுகின்ற *செடில் உற்சவம்* மிகவும் புகழ்பெற்றதாகும். குழந்தை வரம் வேண்டுகின்றவர்கள் தம் பிரார்த்தனை நிறைவேறியபின்னர் நேர்த்திக்கடனை நிறைவேற்றும்பொருட்டு தங்கள் குழந்தைகளை செடில் உற்சவத்தில் பங்கேற்கவைக்கின்றனர். ஏற்றம் போல அமைந்துள்ள செடிலில் குழந்தைகளைத் தாங்கிய படியானது,பூசாரியால் சக்கரம் போல சுழற்றப்படுவதே நேர்த்திக்கடனாகக் கருதப்படுகிறது.
கீதா ராஜா சென்னை