tamilnadu epaper

லட்சம் வில்வ பலன் தரும் சிவ ஸ்லோகம்!

லட்சம் வில்வ பலன் தரும் சிவ ஸ்லோகம்!


சிவத்தை வழிபட அபாயம் ஏதுமில்லை என்பார்கள். சிவ வழிபாடு இம்மைக்கும் மறுமைக்குமான பலத்தையும் பலனையும் வழங்கவல்லது என்பது ஐதீகம். சிந்தையில் சிவத்தை, சதாசர்வ காலமும் நினைத்து, சிவலிங்கத் திருமேனியை தரிசித்து வந்தால், வாழ்வில் சகல தடைகள் அனைத்தையும் நீக்கியருளுவார் சிவனார் என்கின்றனர் பக்தர்கள்.


தமிழகத்தில் பாடல் பெற்ற தலங்கள் உண்டு. வைப்புத் தலங்கள் என்று இருக்கின்றன. பாடல் பெற்ற தலங்களாகவும் வைப்புத் தலங்களாகவும் இல்லாமலும் கோயில்கள் இருக்கின்றன. சோழ தேசத்தில் உள்ள சிவ தலங்களுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு.காவிரிக்கரையில் உள்ள திருத்தலங்கள், கரைக்கு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக தலங்கள் இருக்கின்றன. அவை, தென் கரைத் திருத்தலங்கள் என்றும் வடகரைத் திருத்தலங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.


மாதந்தோறும் அமாவாசைக்கு முன்னேயும் பெளர்ணமிக்கு முன்னேயும் பிரதோஷம் வரும். திரயோதசி திதியன்று பிரதோஷம் வரும். சிவபெருமானுக்கு உகந்த நாள் இது. சிவனாருக்கே உரிய பூஜை இது.


அதேபோல, சிவனாருக்கு மாதந்தோறும் வருகிற சிவராத்திரியும் விசேஷமானது. இந்த நாளில் விரதம் மேற்கொண்டு சிவ தரிசனம் செய்வார்கள் பக்தர்கள். சிவ மந்திரம் சொல்லி இந்த நாட்களில் நாம் செய்கிற பூஜை மிக மிக வலிமையானது. அதேபோல், சிவ பூஜைகளிலும் வழிபாடுகளிலும் பங்கேற்கும் போது, சிவ ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுவது இன்னும் மகத்தான பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள். ஆச்சார்யப் பெருமக்கள்.


சிவபெருமானின் இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபடுங்கள்.


விபூதி சுந்தர மஹேஸ்வர ஹர


சிவசிவ ஹரஹர மஹாதேவ


வில்வதள ப்ரிய சந்திர கலாதர


சிவசிவ ஹரஹர மஹாதேவா


கங்காதர ஹர சாம்ப சதாசிவாய


சிவசிவ ஹரஹர மஹாதேவா


த்ரியம்பகாய லிங்கேஸ்வராய


சிவசிவ ஹரஹர மஹாதேவா


மெளலீஸ்வராய யோகேஸ்வராய


சிவசிவ ஹரஹர மஹாதேவா


குஞ்சேஸ்வராய குபேராஸ்வராய


சிவசிவ ஹரஹர மஹாதேவா


நடேஸ்வராய நாகேஸ்வராய


சிவசிவ ஹரஹர மஹாதேவ


கபாலீஸ்வரய்யா கற்கடேஸ்வராய


சிவசிவ ஹரஹர மஹாதேவா


 ஹரஹர சிவசிவ மஹாதேவா!


இந்த ஸ்லோகத்தைச் சொல்லி ஒரேயொரு வில்வம் சமர்ப்பித்து சிவனாரை வழிபட்டால், லட்சம் வில்வதளத்தை சமர்ப்பித்து வழிபட்ட பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.


ஓம் நமசிவாய...!

சர்வம் சிவார்ப்பணம்!!



அனுப்புதல்:

ப. கோபிபச்சமுத்து,

பாரதியார் நகர்,

கிருஷ்ணகிரி - 1