மேல் சட்டை பிரக்ஞையின்றி
பிரம்பு ஓலைத் தொப்பியுடன்
சிந்தனை வசமான விவசாயி
தாமரை இலைக் குடையோடு
மிதிவண்டி கேரியரில் அமர்ந்த
வாரிசைப் பள்ளிக்கு விரைந்து
கூட்டிச் செல்லும் அக்கறை
மழையிலும் வெய்யிலிலும்
தானடைந்த சிரமங்களை
பேரன் அனுபவிக்க வேண்டாம்
உறுதியாய் சாதிப்பான் எனும்
நம்பிக்கையும் துளிர் விடுகிறது
-பி. பழனி,
சென்னை.