tamilnadu epaper

இதயம் முரளி

இதயம் முரளி

இதயம் முரளி 

முரளிக்கு மனசு பட ,படப்பாய் இருந்தது .எத்தனை வருஷத்து காதல் எப்படியாவது இந்த மாசம் முடியுறதுக்குள்ள சொல்லியாகணும்.இப்படி மனசுல உள்ள காதலை சொல்லாம போனா எனக்கு மிஸ்சஸ் ஆவுற ரம்யா மிஸ் ஆகி வேறு ஒருவருக்கு மிஸ்சஸ் ஆகிடுவா.

தைரியத்தை வர வைடா முரளி என மனதுக்குள் சபதம் எடுத்து கொண்டான் .ஏதோ ஒரு வேகத்தில் மொபைலை எடுத்து ரம்யாவுக்கு போன் செய்தான் .

ட்ரிங் ..ட்ரிங் ...

ஹலோ ரம்யா 

சொல்லுடா 

உன்கிட்ட ஒண்ணு சொல்லணும் 

சொல்லுடா 

ரொம்ப வருசமா மனசுக்குள்ளேயே போட்டு புதைச்சுக்கிட்டு ரொம்ப அவதிப்படுறேன்.

ஐ லவ் யு ரம்யா

அட ச்சீ நீயும் மத்த ஆம்பள பசங்க மாதிரி தானா ?

ரொம்ப அமைதியா இருக்க , நல்லவனா இருக்க ,நல்லா படிக்கிற அதனால தான் உன்கிட்ட பழகுனேன். இத்தனை வருசமா நட்பா பழகுற தோழிக்கிட்ட இப்படி தான் பேசுவியா ?

ஹே ..ரம்யா கொஞ்சம் பொறுமையா நான் சொல்லுறதை கேளு ..

இன்னைக்கு என்ன நாள் ஏப்ரல் 1 அதான் உன்னை ஏப்ரல் பூல் ஆக்க வேண்டி கிண்டலுக்கு லவ் யூ சொன்னேன்.

OH SORRY முரளி.

நீயும் ,மத்த பசங்க மாதிரி தானோன்னு தப்பா நினைச்சுக்கிட்டு கோபத்துல திட்டிட்டேன் .

ஐ அம் சாரிடா முரளி

ITS OK என்று அழுத கண்களோடு தொலைத்த காதலை எண்ணி அதே சமயத்தில் நட்பையாவது காப்பாத்தி விட்டோம் என்ற ஆறுதலோடு போனை வைத்தான் முரளி.

-லி .நௌஷாத் கான் -