tamilnadu epaper

இந்திய விடுதலைப் போரின் முன்னோடியாக தேடுகின்ற வீரபாண்டிய கட்டபொம்மன்

இந்திய விடுதலைப் போரின் முன்னோடியாக தேடுகின்ற வீரபாண்டிய கட்டபொம்மன்

இந்திய விடுதலைப் போரின் முன்னோடியாக தேடுகின்ற வீரபாண்டிய கட்டபொம்மன் தென் தமிழ்நாட்டில் கரிசல் பூமி யான பாஞ்சாலங்குறிச்சியில் 1760 ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் தேதி இந்த மண்ணில் உதித்தார். இவர் 9 ஆண்டுகள் 8 மாதங்கள் பாஞ்சாலங்குறிச்சி மன்னராக நேர்மையுடனும் வீரத்துடனும் ஆட்சி புரிந்தார். . ஆங்கிலேயர்கள் இவரிடம் வரி வசூல் செய்ய வந்தபோது அவர்களை எதிர்த்து துணிவுடன் தன் வாதங்களை வைத்தவர். ஏன் வரி நாங்கள் செலுத்த வேண்டும்? எங்கள் நிலங்களில் வேலை செய்தாயா? எங்களுக்கு ஏதேனும் உதவி செய்தாயா? அல்லது மாமனா மச்சானா எதற்காக உனக்கு நாங்கள் வரி செலுத்த வேண்டும் ?என்று துணிந்து கேட்ட முதல் அரசர் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆவார். ஆங்கிலேயர்கள் பல்வேறு சலுகைகளை உங்களுக்கு வழங்குகிறோம் வரி செலுத்துங்கள் என்ற போது துணிந்து செலுத்த முடியாது என்று வாதிட்டவர் வீரபாண்டிய கட்டபொம்மன். . இந்தப் போர் வீரரான வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை கட்டிட தேர்வு செய்த இடம் எது தெரியுமா ? கட்டபொம்மனின் வேலையாட்கள் சாலிகுளம் என்கிற காற்றுக்கு முயல் வேட்டைக்கு சென்றனர் அப்பொழுது முயல்களைப் பிடிக்க நாய்கள் வந்தபோது முயல்கள் பயப்படாமல் நாய்களை எதிர்த்து விரட்டிய வீரமண்தான்.. பாஞ்சாலங்குறிச்சி. . அங்கு தான் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை கட்டி அரசாட்சி செய்து வந்தான். அதன் பின் கோட்டையும் கொத்தளமும் கொடியும் கண்டு அதை தலைநகர் ஆக்கி கிபி 1101 ஆண்டு சிம்மாசனம் ஏறினார். இவர் இவரின் குலதெய்வமான தேவி ஜக்கம்மா மீது மிகவும் பற்று கொண்டவர். வீரபாண்டிய கட்டபொம்மன் சிறந்த கல்விமான் வாரி வழங்கும் வள்ளல் திருச்செந்தூர் முருகன் இவரது வழிபாட்டுக்குரிய தெய்வம் ஏறத்தாழ 96 கிராமங்கள் இவரது ஆட்சிக்கு உட்பட்டவை..திருச் செந்தூர் கோவிலுக்கு 320 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கி இருக்கிறார். திருச்செந்தூர் கோவில் கருவூலத்தில் இவர் தந்த ஆபரணங்கள் ஐம்பொன் சிற்பங்கள் இப்போதும் காட்சி பொருளாக வைக்கப்பட்டிருக்கின்றன 47-வது மண்ணனான வீரபாண்டிய கட்டபொம்முக்கு தம்பி ஊமைத்துரை என்ற தளவாய் குமாரசாமியும் துரை சிங்கமும் இருந்தனர். இவரது மனைவியின் பெயர் வீர ஜக்கம்மாள். இங்கிலாந்து நாட்டிலிருந்து வெள்ளைக்காரர்கள் வணிகம் செய்வதற்காக சென்னை வந்தவர்கள் படிப்படியாக தங்களின் ஆளுமைக்கு பாஞ்சாலங்குறிச்சியையும் கைப்பற்ற நினைத்தனர். பலவிதமான தூதுவர்களை வெள்ளையர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் அனுப்பியும் கட்டபொம்மன் பணிந்து போக விரும்பவில்லை. பல் வாய்களில் பேச்சுவார்த்தைகள் சமாதான நடவடிக்கை எதிலும் வீரபாண்டிய கட்டபொம்மன் ஒப்புக்கொள்ளவில்லை. இதில் அவருடைய சேனாதிபதியை தன் கைவசம் வைத்துக் கொண்ட வெள்ளையர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனின் பலம் பலவீனம் இவற்றை அறிந்து கொண்டனர். பின்னர் பேச்சு வார்த்தைக்கு புறப்பட விரும்பிய கட்டபொம்மனை அவன் தாயாரும் அவனது மனைவியும் நீங்கள் போகக்கூடாது. . கோட்டையில் இருந்தபடியே எது வரினும் எதிர்கொள்வோம் என்றனர். வீரபாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் இருந்து வெளியேறியவுடன் இதை அறிந்த எட்டப்பன் உதவியோடு பாஞ்சாலங்குறிச்சியை வெள்ளைக்காரர்கள் கைப்பற்றினார்கள். . எட்டப்பனின் விசுவாசத்திற்காக வெள்ளைக்காரர்கள் என் இனிய பாஞ்சாலங்குறிச்சிக்கும் அரசராக நியமிக்கப்படுகிறீர்கள் என்று கூறினார்கள். 

   வீரபாண்டிய கட்டபொம்மன் நிலை மிகவும் வருத்தத்துக்குரியதாகிவிட்டது. . தனக்கு உதவிட வந்த காடல் குடி ஜமீன்தார் அவர்களிடம் என்னுடைய தாய் தம்பியர் மனைவி இவர்கள் பேச்சை எல்லாம் கேட்காமல் பில்லை சொல்வதைக் கேட்டு எல்லாவற்றையும் இழந்து விட்டேன் என்று வருந்துகிறார். . புதுக்கோட்டையில் பதுங்கி இருந்த வீரபாண்டிய கட்டபொம்மனை 1799 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி அவருக்கு தூக்கு தண்டனை விதித்தனர். . குற்றங்கள் செய்தது மட்டுமில்லாமல் எதிர்த்து செயல்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தூக்கு தண்டனை விதிக்கிறேன் இன்று பாணர்மேன் தீர்ப்பு வழங்கினார். . நான் போர் செய்து போர்க்களத்தில் வீர மரணம் எழுதியிருக்க வேண்டும். . எனக்கு இந்த இழிவு சாவு தேவைதான் என்று சொல்லி தூக்கு மேடையை நோக்கி சென்ற வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்குக் கயிற்றினை தானே மாட்டிக் கொண்டு வீர மரணம் தழுவினார். சுதந்திரப் போராட்ட வீரர் மறைந்த நாள் 1799 ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் நாள். ஆம் வீரத்தின் விளைநிலமாக விளங்கிய வீரபாண்டிய கட்டபொம்மனும் அவனுடைய உறவினர்களும் மற்றும் பலரும் வீர மரணத்தை தழுவினார்கள். . 

 

முதல் விடுதலைப் போர் வீரரான வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் பாடும் வண்ணம் 1974 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் பழங்கால கோட்டை வடிவில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. . வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மண்டபம் உள்ளே கட்டபொம்மனின் வீர வரலாறுகளை குறிக்கும் ஓவியங்கள் சிற்பங்கள் உள்ளன 1977 ஆம் ஆண்டு முதல் சுற்றுலாத்துறை இதை பராமரித்து வருகிறது. . மண்ணின் வீரமிக்க மாபெரும் சுதந்திரப் போராட்ட முதல் வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு போற்றுவோம். 

 

ந. சண்முகம் திருவண்ணாமலை.