பாட்னா,
பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய மந்திரி அமித் ஷா, மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் கலந்து கொண்டனர். அரசின் நலத்திட்டங்களை பெறும் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை அளித்தனர். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய நிதிஷ்குமார் கூறியதாவது:- பாஜகவை இனி ஒரு போதும் கைவிட மாட்டேன். இரண்டு முறை தவறு செய்துவிட்டேன். இனி அந்த தவறு நடக்காது. இங்கு கூடி உள்ள கூட்டம் அரங்கம் முழுவதும் நிரம்பி உள்ளது.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு,அனைத்து விஷயங்களும் மேம்படத் தொடங்கின. 90-களின் நடுப்பகுதியில் இருந்து பாஜக கூட்டணியில் இருந்தோம். 2014-ல் பிரிந்தோம். 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்தோம். 2022-ம் ஆண்டில், மீண்டும் பிரிந்தோம், இருப்பினும், கடந்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, மீண்டும் ஒரு முறை தலைகீழாக மாறி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தோம். பாஜகவுடனான கூட்டணி முறிவுக்கு எனது சொந்தக் கட்சியில் உள்ள சிலர் தான் காரணம். இரண்டு முறை நான் தவறு செய்தேன். ஆனால் அது மீண்டும் ஒருபோதும் நடக்காது" என்றார்.